ٱلَّذِينَ يَجْتَنِبُونَ كَبَٰٓئِرَ ٱلْإِثْمِ وَٱلْفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلْمَغْفِرَةِ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنشَأَكُم مِّنَ ٱلْأَرْضِ وَإِذْ أَنتُمْ أَجِنَّةٌ فِى بُطُونِ أُمَّهَٰتِكُمْ فَلَا تُزَكُّوٓا۟ أَنفُسَكُمْ هُوَ أَعْلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் பெரும் பாவங்கள், இன்னும் மானக்கேடான செயல்களை விட்டும் விலகி இருப்பார்கள், சிறு தவறுகளைத் தவிர. (அந்த சிறு தவறுகளை அல்லாஹ் அவர்களுக்கு மன்னித்து விடுவான்.) நிச்சயமாக உமது இறைவன் விசாலமான மன்னிப்புடையவன். அவன் உங்களை பூமியில் இருந்து உருவாக்கிய போதும் (ஆதமை மண்ணிலிருந்து படைத்த போதும், பிறகு,) நீங்கள் உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும் அவன் உங்களை (-யார் நல்லவர், யார் தீயவர் என்று) மிக அறிந்தவனாக இருக்கின்றான். ஆகவே, உங்களை நீங்களே (தூய்மையானவர்களாக) பீத்திக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சியவர்களை அவன் மிக அறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் எத்தகையோர் என்றால் பெரும் பாவங்கள், இன்னும் மானக்கேடான செயல்களை விட்டும் விலகி இருப்பார்கள், (மனதில் வந்துபோகும்) சிறு ஆசைகளைத் தவிர (அல்லது சிறிய தவறுகளைத் தவிர. அந்த சிறு தவறுகளை அல்லாஹ் அவர்களுக்கு மன்னித்து விடுவான்). நிச்சயமாக உமது இறைவன் விசாலமான மன்னிப்புடையவன். அவன் உங்களை பூமியில் இருந்து உருவாக்கியபோதும் (ஆதமை மண்ணிலிருந்து படைத்தபோதும், பிறகு,) நீங்கள் உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் சிசுக்களாக இருந்தபோதும் அவன் உங்களை (-யார் நல்லவர், யார் தீயவர் என்று) மிக அறிந்தவனாக இருக்கிறான். ஆகவே, (நீங்கள் தூய்மையானவர்கள் என்று) நீங்களே உங்களை உயர்வாக பேசிக்கொள்ளாதீர்கள்! இறையச்சமுள்ளவர்ளை அவன் மிக அறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi32. (நன்மை செய்யும்) அவர்கள் (ஏதும் தவறாக ஏற்பட்டுவிடும்) அற்பமான பாவங்களைத் தவிர, மற்ற பெரும்பாவங்களிலிருந்தும், மானக்கேடான விஷயங்களிலிருந்தும் விலகியிருப்பார்கள். நிச்சயமாக உமது இறைவன் மன்னிப்பதில் மிக்க தாராளமானவன். உங்களைப் பூமியிலிருந்து உற்பத்தி செய்த சமயத்தில் (உங்கள் தன்மையை) அவன் நன்கறிவான். நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் கர்ப்பப்பிண்டமாயிருந்த சமயத்திலும் உங்களை அவன் நன்கறிவான். ஆகவே, ‘‘தூய்மையானவர்கள்' என உங்களை நீங்களே தற்புகழ்ச்சி செய்துகொள்ளாதீர்கள். உங்களில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்பவர்கள் யாரென்பதை அவன் நன்கறிவான்.