Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால் (அதை) புறக்கணிக்கின்றனர்; இன்னும் (இது ஒரு) தொடர்ச்சியான சூனியமாகும் என்றும் கூறுகின்றனர்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் அவர்கள் பொய்ப்பித்தனர்; தங்கள் மன இச்சைகளை அவர்கள் பின்பற்றினார்கள். எல்லாக் காரியங்களும் (அவற்றுக்குரிய இடத்தில்) நிலையாகத் தங்கக் கூடியதுதான். (நன்மை, நல்லவர்களை சொர்க்கத்தில் தங்க வைக்கும். தீமை, பாவிகளை நரகத்தில் தங்க வைக்கும்.)
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமிக ஆழமான ஞானம் (-இந்த குர்ஆன் அவர்களிடம் வந்திருக்கின்றது). ஆனால், எச்சரிப்பாளர்கள் (பலர் எச்சரித்தும் அவர்களுக்கு அவர்கள்) பலனளிக்க முடியவில்லை.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அவர்களை விட்டு நீர் விலகி விடுவீராக! அழைப்பாளர் மிக கடினமான ஒன்றை நோக்கி (-மறுமையின் மைதானத்தை நோக்கி) அழைக்கின்ற நாளில்
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களது பார்வைகள் இழிவடைந்த நிலையில், (கூட்டமாக) பரவி வரக்கூடிய வெட்டுக் கிளிகளைப் போல் அவர்கள் புதைக்குழிகளை விட்டு (விரைந்து) வெளியேறுவார்கள்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்கள் பொய்ப்பித்தனர். ஆக, அவர்கள் நமது அடியாரை பொய்ப்பித்தனர். (அது மட்டுமா!) அவர் ஒரு பைத்தியக்காரர் என்று(ம்) கூறினர். இன்னும் அவர் (அவர்களால் கடுமையாக) எச்சரிக்கப்பட்டார்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அவர் தனது இறைவனிடம், “நிச்சயமாக நான் தோற்கடிக்கப்பட்டேன். ஆகவே, நீ பழி தீர்ப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் பூமியை ஊற்றுக் கண்களால் பீறிட்டு ஓடச்செய்தோம். (வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும்) தண்ணீர் திட்டமாக நிர்ணயிக்கப்பட்ட ஒரு காரியத்தின் மீது சந்தித்தன.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவரை பலகைகள் இன்னும் ஆணிகள் உடைய (-பலகைகள் இன்னும் ஆணிகளினால் செய்யப்பட்ட) கப்பல் மீது பயணிக்க வைத்தோம்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது நமது கண்களுக்கு முன்பாக (-நமது பார்வையில் நமது கட்டளைப் படி) செல்கிறது, நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு கூலி கொடுப்பதற்காக.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாம் அவர்கள் மீது குளிர்ந்த சூறாவளிக் காற்றை (நரகம் வரை நீடித்து இருக்கும்) நிலையான ஒரு தீமையுடைய நாளில் அனுப்பினோம்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது மக்களை கழட்டி எறிந்தது. அவர்கள் வேரோடு சாய்ந்த பேரீட்ச மரத்தின் பின் பகுதிகளைப் போல் ஆகிவிட்டார்கள்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎங்களில் இருந்து ஒருவராக இருக்கின்ற ஒரு மனிதரையா நாங்கள் பின்பற்றுவோம்! அப்படி என்றால் நிச்சயமாக நாங்கள் வழிகேட்டிலும் சிரமத்திலும் ஆகிவிடுவோம் என்று கூறினர்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎங்களுக்கு மத்தியில் அவருக்கு மட்டும் இறைவேதம் இறக்கப்பட்டதா? இல்லை, அவர் பெருமையுடைய பெரும் பொய்யர் ஆவார்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாம் பெண் ஒட்டகத்தை அவர்களுக்கு சோதனையாக அனுப்புவோம். அவர்களிடம் (அவர்களுக்கு வர இருக்கின்ற வேதனையை) நீர் எதிர்பார்த்திருப்பீராக! இன்னும் பொறுமை காப்பீராக!
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக தண்ணீர் (ஒட்டகம் நீர் குடிக்காத நாளில்) அவர்களுக்கு மத்தியில் (சமமான) பங்காகும் என்று அவர்களுக்கு அறிவிப்பீராக! தண்ணீர் குடிக்கப்படுகின்ற எல்லா நேரங்களிலும் (அந்த அந்த நேரத்திற்குரியவர்கள் மட்டும்) ஆஜராக வேண்டும்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அந்த ஒட்டகத்தைக் கொல்வதற்காக) அவர்கள் தங்கள் தோழரை அழைத்தனர். அவன் (தனது கரத்தால் அதைப்) பிடித்து, அறுத்தான்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரே ஒரு சப்தத்தை அனுப்பினோம். அவர்கள் தொழுவத்தின் தீணிகளைப் போல் ஆகிவிட்டனர்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அவர்கள் மீது நாம் கல் மழையை அனுப்பினோம், லூத்துடைய குடும்பத்தார்களைத் தவிர. அவர்களை நாம் அதிகாலையில் பாதுகாத்தோம்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்மிடமிருந்து (அவர்கள் மீது) அருட்கொடையாக (நாம் அவர்களை பாதுகாத்தோம்). இவ்வாறுதான் நன்றி செலுத்துபவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக அவர்கள் அவரிடம் அவரது விருந்தினர்களை வேண்டி (விருந்தினர்களிடம் தங்கள் ஆசையை தனித்துக் கொள்ள) அடம்பிடித்தனர். நாம் அவர்களின் கண்களை (அழித்து முகத்தோடு முகமாக) சமமாக்கி விட்டோம். ஆகவே, என் தண்டனையையும் என் எச்சரிக்கையையும் சுவையுங்கள்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதிகாலை சூரியன் விடிவதற்கு முன் (நரகம் வரை தொடர்ந்து) நிலைத்திருக்கக்கூடிய வேதனை காலையில் அவர்களை திட்டவட்டமாக வந்தடைந்தது.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் நமது அத்தாட்சிகளை எல்லாம் பொய்ப்பித்தனர். ஆகவே, மிக்க மிகைத்தவன், மகா வல்லமை உடையவனின் தண்டனையால் அவர்களை தண்டித்தோம்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களுடைய (இக்கால) நிராகரிப்பாளர்கள் (முந்திய நிராகரிப்பாளர்களாகிய) அவர்களை விட சிறந்தவர்களா? (நீங்கள் திருந்தவில்லை என்றால், அவர்களுக்கு வந்த வேதனை உங்களுக்கும் வரும்.) அல்லது (அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து பாதுகாப்பிற்குரிய) விடுதலை பத்திரம் (முந்திய) வேதங்களில் உங்களுக்கு இருக்கிறதா?
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லது, நாங்கள் (எங்களை பிரிக்க நினைப்பவர்களிடம்) பழிதீர்த்துக் கொள்கின்ற கூட்டம் ஆவோம் என்று அவர்கள் கூறுகின்றார்களா?
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமாறாக, மறுமைதான் இவர்களின் (முழுமையான தண்டனைக்கு) வாக்களிக்கப்பட்ட நேரமாகும். மறுமை மிக பயங்கரமானதும் மிக கசப்பானதுமாகும்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநரகத்தில் அவர்களின் முகங்கள் மீது அவர்கள் இழுக்கப்படும் நாளில், “ஸகர் நரகத்தின் கடுமையை சுவையுங்கள்!” (என்று அவர்களுக்கு கூறப்படும்).
Tamil Translation - Omar Sharif - Abridged Version(உங்களைப் போன்ற) உங்கள் சக கொள்கையுடையவர்களை (இதற்கு முன்னர்) நாம் திட்டவட்டமாக அழித்தோம். நல்லுபதேசம் பெறுபவர் யாரும் உண்டா?
Tamil Translation - Omar Sharif - Abridged Version(வீண் பேச்சுகள் அற்ற) உண்மையான பேச்சுகளுடைய சபையில், மகா வல்லமையுடைய பேரரசனுக்கு அருகில் இருப்பார்கள்.