caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Najm அத்தியாயம், வசனம் 28

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 23 · 53:28

وَمَا لَهُم بِهِۦ مِنْ عِلْمٍ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغْنِى مِنَ ٱلْحَقِّ شَيْـًٔا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுக்கு அ(வர்கள் செய்வ)தைப் பற்றி எவ்வித கல்வி அறிவும் இல்லை. அவர்கள் வீண் எண்ணத்தைத் தவிர வேறு எதையும் பின்பற்றுவதில்லை. நிச்சயமாக வீண் எண்ணம் உண்மைக்கு பதிலாக அறவே பலன் தராது. (உண்மையின் இடத்தில் வீண் எண்ணம் நிற்கமுடியாது.)
Tamil Translation - Omar Sharifஅவர்களுக்கு அ(வர்கள் செய்வ)தைப் பற்றி எவ்வித கல்வி அறிவும் இல்லை. வீண் எண்ணத்தைத் தவிர அவர்கள் (உண்மையை) பின்பற்றுவதில்லை. நிச்சயமாக வீண் எண்ணம் உண்மைக்கு பதிலாக அறவே பலன் தராது. (உண்மையின் இடத்தில், அதற்கு சமமாக வீண் எண்ணம், கற்பனை கதைகள் நிற்கமுடியாது.)
Tamil Translation - Abdulhamid Baqawi28. இதைப் பற்றி அவர்களுக்கு ஒரு ஞானமும் கிடையாது. (ஆதாரமற்ற) வீண் சந்தேகத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் பின்பற்றுவதில்லை. வீண் சந்தேகம் எதையும் உறுதிப்படுத்தாது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70