முகப்பு › அத்தியாயங்கள் › An-Naazi'aat அத்தியாயம்
An-Naazi'aat அத்தியாயம் النازعات
46 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 81
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلنَّٰزِعَٰتِ غَرْقًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version (தீயோரின் உயிர்களைக்) கடுமையாகப் பறிப்பவர்கள் மீது சத்தியமாக!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَٱلنَّٰشِطَٰتِ نَشْطًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version (நல்லோரின் உயிர்களை) மென்மையாக கைப்பற்றுவோர் மீது சத்தியமாக!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَٱلسَّٰبِحَٰتِ سَبْحًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version நீந்துவோர் மீது சத்தியமாக!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَٱلسَّٰبِقَٰتِ سَبْقًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version (இறைக் கட்டளையை நிறைவேற்ற) முந்துவோர் மீது சத்தியமாக!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version காரியத்தை நிர்வகிப்போர் மீது சத்தியமாக! (நீங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப் படுவீர்கள்.)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version பூமி(யும் மலையும் பலமாக) அதிர்ச்சி யுறுகின்ற நாளில்...
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version பின்தொடரக்கூடியது அதைத் தொடரும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அந்நாளில், (சில) உள்ளங்கள் நடுங்கும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَبْصَٰرُهَا خَٰشِعَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவற்றின் பார்வைகள் (பயத்தால்) கீழ்நோக்கும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (நிராகரிப்போர்) கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாம் (உயிர்ப்பிக்கப்பட்டு) முந்திய நிலைமைக்குத் திருப்பப்படுவோமா?”
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَءِذَا كُنَّا عِظَٰمًا نَّخِرَةً
Tamil Translation - Omar Sharif - Abridged Version (அதுவும்) உக்கிப்போன எலும்புகளாக நாம் மாறி இருந்தாலுமா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
قَالُوا۟ تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவ்வாறாயின், அது நஷ்டமான திரும்புதல் என்று (கேலியாகக்) கூறுகிறார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (மறுமையாகிய) அதுவெல்லாம் ஒரே ஓர் அதட்டல் (சப்தம்) தான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அப்போது அவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) பூமியின் மேற்பரப்பில் (ஒன்று சேர்க்கப்பட்டு) இருப்பார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு வந்ததா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى
Tamil Translation - Omar Sharif - Abridged Version “துவா” (எனும்) பரிசுத்தமான பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்த சமயத்தை (நினைவு கூருங்கள்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஃபிர்அவ்னிடம் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்பு மீறினான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, (மூஸாவே!) நீர் (அவனிடம்) கூறுவீராக! “(ஃபிர்அவ்னே!) நீ (இஸ்லாமை ஏற்று) பரிசுத்தமடைவதற்கு உனக்கு விருப்பமா?”
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version “இன்னும், உன் இறைவனின் பக்கம் உனக்கு நான் நேர்வழி காட்டுவதற்கும், நீ (அவனைப்) பயந்து கொள்வதற்கும் உனக்கு விருப்பமா?”
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَأَرَىٰهُ ٱلْـَٔايَةَ ٱلْكُبْرَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (மூஸா) மிகப்பெரிய அத்தாட்சியை அவனுக்குக் காண்பித்தார்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَكَذَّبَ وَعَصَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆனால், அவன் பொய்ப்பித்தான், இன்னும் மாறுசெய்தான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version பிறகு (நிராகரிப்பில் மேலும்) முயன்றவனாக (மூஸாவை விட்டு) விலகினான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَحَشَرَ فَنَادَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் (மக்களை) ஒன்று சேர்த்து கூவி அழைத்தான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நான் தான் மிக உயர்வான உங்கள் இறைவன் எனக் கூறினான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْـَٔاخِرَةِ وَٱلْأُولَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆகவே, இம்மை, மறுமையின் தண்டனையைக் கொண்டு அல்லாஹ் அவனைப் பிடித்தான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (அல்லாஹ்வைப்) பயப்படுகிறவருக்கு நிச்சயமாக இதில் ஒரு படிப்பினை இருக்கிறது.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ بَنَىٰهَا
Tamil Translation - Omar Sharif - Abridged Version (மனிதர்களே!) படைப்பால் நீங்கள் மிகக் கடினமானவர்களா? அல்லது வானமா? (அல்லாஹ்தான்) அதை (-வானத்தை) அமைத்தான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا
Tamil Translation - Omar Sharif - Abridged Version அதன் முகட்டை உயர்த்தினான், இன்னும் அதை ஒழுங்குபடுத்தினான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் அதன் இரவை இருளாக்கினான், அதன் பகலை (ஒளியுடன்) வெளியாக்கினான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் பூமியை அதன் பின்னர், (அதை) விரித்தான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا
Tamil Translation - Omar Sharif - Abridged Version அதிலிருந்து அதன் நீரையும், இன்னும் அதன் மேய்ச்சலையும் வெளியாக்கினான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் மலைகளை (அதில் அவற்றை) நிறுவினான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
مَتَٰعًا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ
Tamil Translation - Omar Sharif - Abridged Version உங்களுக்கும் இன்னும் உங்கள் கால்நடைகளுக்கும் பலன் தருவதற்காக (இவற்றைப் படைத்தான்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆகவே, (ஒரு நாளில் மறுமையின்) மிகப்பெரிய பயங்கரமான அழிவு வந்தால்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ مَا سَعَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version மனிதன் தான் செய்ததை நினைத்துப் பார்க்கின்ற (அந்)நாளில்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (அந்நாளில்) காண்பவருக்கு நரகம் வெளியாக்கப்படும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَأَمَّا مَن طَغَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆகவே, யார் வரம்பு மீறினானோ,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் (அற்பமான) உலக வாழ்வைத் தேர்ந்தெடுத்தானோ,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக நரகம்தான் (அவனுக்கு) தங்குமிடம் ஆகும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆகவே, யார் தன் இறைவனுக்கு முன் (தான்) நிற்கின்ற நாளைப் பயந்து, (தீய) இச்சையை விட்டு ஆன்மாவைத் தடுத்தானோ,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக சொர்க்கம்தான் (அவனுக்கு) தங்குமிடம் ஆகும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا
Tamil Translation - Omar Sharif - Abridged Version (நபியே!) மறுமையைப் பற்றி, எப்போது அது நிகழும் என உம்மிடம் கேட்கிறார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (எப்போது நிகழுமென) அதைக் கூறுவதற்கு எதில் நீர் இருக்கிறீர்? (உமக்கு அந்த ஞானம் இல்லையே!)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ
Tamil Translation - Omar Sharif - Abridged Version உம் இறைவன் பக்கம்தான் அதன் முடிவு (இருக்கிறது).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا
Tamil Translation - Omar Sharif - Abridged Version (நபியே!) நீரெல்லாம் அதைப் பயப்படுகிற வரை (அச்சமூட்டி) எச்சரிப்பவரே. (தவிர அது வரும் காலத்தை அறிவிப்பவரல்ல.)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا
Tamil Translation - Omar Sharif - Abridged Version அதை அவர்கள் (கண்ணால்) காணுகின்ற நாளில், நிச்சயமாக ஒரு (நாளின்) மாலை அல்லது அதன் முற்பகலைத் தவிர (இவ்வுலகில் அவர்கள்) தங்கவில்லை (என்பது) போன்றே (அவர்களுக்குத் தோன்றும்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
← An-Naba அத்தியாயம்
Abasa அத்தியாயம் →
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
→
அரபு மூலமும் மொழிபெயர்ப்புகளும் Tanzil மற்றும் QuranEnc வழியாக — சொல்லுக்குச் சொல், மாற்றப்படாமல் · மொழிபெயர்ப்புகள் அவற்றின் மொழிபெயர்ப்பாளர்களுக்கு உரியவை; குர்ஆன் அல்ல
இது ஓர் ஆய்வு உதவியாகும்; மார்க்கத் தீர்ப்பின் ஆதாரம் அல்ல.