ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ بَنَىٰهَا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(மனிதர்களே!) படைப்பால் நீங்கள் மிகக் கடினமானவர்களா? அல்லது வானமா? (அல்லாஹ்தான்) அதை (-வானத்தை) அமைத்தான்.
Tamil Translation - Omar Sharif(மனிதர்களே!) படைப்பால் நீங்கள் மிகப் பலமானவர்களா? அல்லது வானமா? (அல்லாஹ்தான்) அ(ந்த வானத்)தை அமைத்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi27. (மனிதர்களே!) நீங்கள் பலமான படைப்பா? அல்லது வானமா? அவன்தான் அவ்வானத்தைப் படைத்தான்.