caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Mursalaat அத்தியாயம் المرسلات

50 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 33

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلْمُرْسَلَٰتِ عُرْفًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதொடர்ச்சியாக வீசுகிற காற்றுகள் மீது சத்தியமாக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَٱلْعَٰصِفَٰتِ عَصْفًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதிவேகமாக வீசுகிற புயல்காற்றுகள் மீது சத்தியமாக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلنَّٰشِرَٰتِ نَشْرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(மேகங்களை பல திசைகளில்) பரப்புகின்ற காற்றுகள் மீது சத்தியமாக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَٱلْفَٰرِقَٰتِ فَرْقًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(உண்மைக்கும் பொய்யுக்கும் இடையில்) தெளிவாக பிரித்துவிடக் கூடிய அத்தாட்சிகள் மீது சத்தியமாக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَٱلْمُلْقِيَٰتِ ذِكْرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபிமார்கள் மீது வேதங்களை) இறக்குகிற (வான)வர்கள் மீது சத்தியமாக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

عُذْرًا أَوْ نُذْرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அல்லாஹ்வின் புறத்திலிருந்து அடியார்கள் மீது) ஆதாரமாக இருப்பதற்காக, அல்லது (அவர்களுக்கு) எச்சரிக்கையாக இருப்பதற்காக (வேதங்கள் இறக்கப்படுகின்றன)!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நீங்கள் எச்சரிக்கப்படுவது நிகழ்ந்தே தீரும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, நட்சத்திரங்கள் ஒளி மங்கிவிடும்போது,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், வானம் பிளக்கப்படும்போது,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், மலைகள் சுக்கு நூறாக பொசுக்கப்படும்போது,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், தூதர்கள் (மறுமையில் அவர்களுக்கான குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று சேர்வதற்காக) நேரம் குறிக்கப்படும்போது,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎந்த நாளுக்காக அவர்கள் நேரம் குறிக்கப்பட்டு இருக்கிறார்கள்!?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

لِيَوْمِ ٱلْفَصْلِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(ஆம், மறுமையின்) தீர்ப்பு நாளுக்காக (அவர்கள் நேரம் குறிக்கப்பட்டுள்ளார்கள்).

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلْفَصْلِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதீர்ப்பு நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

أَلَمْ نُهْلِكِ ٱلْأَوَّلِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நிராகரித்த) முன்னோர்களை நாம் அழிக்கவில்லையா?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ثُمَّ نُتْبِعُهُمُ ٱلْـَٔاخِرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, (அவர்களுக்கு பின்னர் வந்த நிராகரிப்பாளர்களான) பின்னோர்கள் (நிராகரிப்பிலும் பிறகு தண்டனை அனுபவிப்பதிலும்) அவர்(களின் முன்னோர்)களை பின்தொடரும்படி செய்தோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவ்வாறுதான் குற்றவாளிகளுக்கு நாம் செய்வோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّآءٍ مَّهِينٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபலவீனமான ஒரு நீரிலிருந்து நாம் உங்களை படைக்கவில்லையா?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَجَعَلْنَٰهُ فِى قَرَارٍ مَّكِينٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, உறுதியான ஓர் இடத்தில் நாம் அதை வைத்தோம்,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِلَىٰ قَدَرٍ مَّعْلُومٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionகுறிப்பிட்ட ஒரு தவணை வரை.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَقَدَرْنَا فَنِعْمَ ٱلْقَٰدِرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம் திட்டமிட்டோம். நாமே சிறந்த திட்டமிடுபவர்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ كِفَاتًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபூமியை (அது தனக்குள்) ஒன்று சேர்க்கக்கூடிய ஒரு பாத்திரமாக நாம் ஆக்கவில்லையா,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَحْيَآءً وَأَمْوَٰتًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அது தன் முதுகின் மேல்) உயிருள்ளவர்களையும் (தன் வயிற்றுக்குள்) இறந்தவர்களையும் (சுமக்கக்கூடிய ஒரு பாத்திரமாக நாம் ஆக்கவில்லையா)?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَجَعَلْنَا فِيهَا رَوَٰسِىَ شَٰمِخَٰتٍ وَأَسْقَيْنَٰكُم مَّآءً فُرَاتًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதில் மிக பிரமாண்டமான மலைகளை நாம் ஆக்கினோம். உங்களுக்கு மதுரமான நீரை நாம் புகட்டினோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் எதை பொய்ப்பிப்பவர்களாக இருந்தீர்களோ அதன் பக்கம் (இன்று) செல்லுங்கள்!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ ظِلٍّ ذِى ثَلَٰثِ شُعَبٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமூன்று கிளைகளை உடைய (நெருப்பு) புகையின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِى مِنَ ٱللَّهَبِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது நிழல்தரக்கூடியது அல்ல, அது (நெருப்பின்) ஜுவாலையை தடுக்காது.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّهَا تَرْمِى بِشَرَرٍ كَٱلْقَصْرِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அ(ந்த நரகமான)து மாளிகையைப் போல் உள்ள நெருப்பு கங்குகளை எறியும்!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كَأَنَّهُۥ جِمَٰلَتٌ صُفْرٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவையோ கரு மஞ்சள் நிற ஒட்டகைகளைப் போல் இருக்கும்!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

هَٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇது அவர்கள் பேசாத நாளாகும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுக்கு அனுமதி தரப்படாது. (அனுமதி கொடுத்தால்தானே) அவர்கள் காரணம் கூறுவதற்கு.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

هَٰذَا يَوْمُ ٱلْفَصْلِ جَمَعْنَٰكُمْ وَٱلْأَوَّلِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇது தீர்ப்பு நாளாகும். உங்களையும் முன்னோரையும் (ஒரே மைதானத்தில்) நாம் ஒன்று சேர்த்துள்ளோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களிடம் (எங்களுக்கு எதிராக தீங்கு செய்வதற்கு) ஒரு சூழ்ச்சி இருந்தால், எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّ ٱلْمُتَّقِينَ فِى ظِلَٰلٍ وَعُيُونٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக இறையச்சம் உள்ளவர்கள் (அடர்த்தியான மரங்களின்) நிழல்களிலும் ஊற்றுகளிலும்,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَفَوَٰكِهَ مِمَّا يَشْتَهُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் விரும்புகின்ற பழங்களிலும் (-அவற்றைப் புசிப்பதிலும்) இருப்பார்கள். (-அவற்றை முழுமையாக அனுபவிப்பார்கள்.)

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கு (நல்ல அமல்களுக்கு) பகரமாக இன்பமாக உண்ணுங்கள்! பருகுங்கள்!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாம் நல்லறம் புரிபவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كُلُوا۟ وَتَمَتَّعُوا۟ قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(இவ்வுலகில்) கொஞ்ச காலம் உண்ணுங்கள்! இன்புறுங்கள்! நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள்!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِذَا قِيلَ لَهُمُ ٱرْكَعُوا۟ لَا يَرْكَعُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதொழுங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால் அவர்கள் தொழ மாட்டார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇதற்கு பின்னர், வேறு எந்த குர்ஆனை இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70