Tamil Translation - Omar Sharif - Abridged Versionகாலத்தில் இருந்து ஒரு நேரம் மனிதனுக்கு வரவில்லையா, (அந்த காலத்தில்) நினைவு கூரப்படுகின்ற ஒரு பொருளாக அவன் இருக்கவில்லை?
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாம் மனிதனை (ஆண், பெண்ணுடைய இந்திரியத்தில் இருந்து) கலக்கப்பட்ட விந்துத் துளியிலிருந்து படைத்தோம். அவனை நாம் சோதிக்கின்றோம். ஆகவே, அவனை செவியுறுபவனாக, பார்ப்பவனாக ஆக்கினோம்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாம் அவனுக்கு (நேரான) பாதையை வழிகாட்டினோம், ஒன்று அவன் நன்றி உள்ளவனாக இருப்பதற்கு, அல்லது நன்றி கெட்டவனாக இருப்பதற்கு.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நல்லவர்கள் ஒரு மது குவளையிலிருந்து பருகுவார்கள், அதன் கலப்பு காஃபூர் நறுமணத்தால் இருக்கும்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது (-அந்த நறுமணம்) ஓர் ஊற்றாகும். அதில் இருந்து அல்லாஹ்வின் அடியார்கள் அருந்துவார்கள். அதை அவர்கள் (விரும்பிய இடங்களுக்கெல்லாம்) ஓட வைப்பார்கள்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் நேர்ச்சையை (-தங்கள் மீதுள்ள கடமையான வணக்கங்களை) நிறைவேற்றுவார்கள். இன்னும் ஒரு நாளை பயப்படுவார்கள், அதன் தீமை (அல்லாஹ் கருணை புரிந்தவர்களைத் தவிர மற்ற எல்லோரையும்) சூழ்ந்ததாக, (அவர்கள் மீது) பரவியதாக, கடுமையானதாக இருக்கும்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் உணவை அதன் பிரியம் (அதன் தேவை தங்களுக்கு) இருப்பதுடன் ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் கைதிகளுக்கும் உணவளிப்பார்கள்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் (பாவிகளின் முகங்கள்) கடுகடுக்கின்ற (குற்றவாளிகளின் நெற்றிகள்) சுருங்கிவிடுகின்ற ஒரு நாளை பயப்படுகின்றோம்” (என்று அவர்கள் தங்கள் மனதில் கூறுவார்கள்).
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அந்நாளின் தீமையில் இருந்து அல்லாஹ் அவர்களை பாதுகாப்பான். அவன் அவர்களுக்கு முக செழிப்பையும் மன மகிழ்ச்சியையும் கொடுப்பான்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் அவர்கள் பொறுமையாக இருந்ததால் அவன் அவர்களுக்கு சொர்க்கத்தையும் பட்டையும் (-பட்டாடைகளையும்) கூலியாகக் கொடுப்பான்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதன் (மரங்களின்) நிழல்கள் அவர்களுக்கு அருகில் இருக்கும். அவற்றின் கனிகள் மிக தாழ்வாக (பறித்து புசிப்பதற்கு இலகுவாக) ஆக்கப்பட்டிருக்கும்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவெள்ளியினால் செய்யப்பட்ட பாத்திரங்கள், இன்னும் கண்ணாடிகளாக இருக்கின்ற கெண்டிகள் உடன் அவர்கள் முன் சுற்றி வரப்படும்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் அதில் (-சொர்க்கத்தில்) மதுக் குவளையில் இருந்து அவர்களுக்கு (மது) புகட்டப்படும். அதன் கலவை இஞ்சியாக இருக்கும்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிரந்தரமான சிறுவர்கள் அவர்களை சுற்றி வருவார்கள். நீர் அவர்களைப் பார்த்தால் பரப்பி வைக்கப்பட்ட முத்துக்களாக அவர்களை எண்ணுவீர்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுக்கு மேல் (உள் புறம்) பச்சை நிற மென்மையான பட்டும் (வெளி புறம்) தடிப்பான பட்டு ஆடைகளும் இருக்கும். இன்னும் வெள்ளியினால் செய்யப்பட்ட காப்புகளால் அலங்கரிக்கப்படுவார்கள். அவர்களின் இறைவன் அவர்களுக்கு மிகத் தூய்மையான பானத்தை புகட்டுவான்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக இவை (அனைத்தும்) உங்களுக்கு (-நீங்கள் செய்த நன்மைகளுக்கு) கூலியாக இருக்கும். உங்கள் (-சொர்க்கத்தைப் பெறுவதற்காக நீங்கள் செய்த) உழைப்புகள் நன்றி அறியப்பட்டதாக இருக்கும்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉமது இறைவனின் தீர்ப்புக்காக (அது வரும் வரையில்) நீர் சகித்திருப்பீராக! அவர்களில் (எந்த ஒரு) பாவிக்கும் அல்லது நிராகரிப்பாளருக்கும் நீர் கீழ்ப்படியாதீர்!
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉமது இறைவனின் பெயரை காலையி(ல் ஃபஜ்ர் தொழுகையி)லும் மாலையி(ல் ளுஹ்ர், அஸ்ர் தொழுகைகளி)லும் நினைவு கூர்வீராக!
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇரவில் (மஃரிபு இன்னும் இஷா தொழுகைகளை) அவனுக்காக சிரம் பணிந்து தொழுவீராக! இன்னும் நீண்ட நேரம் (உபரியான இரவுத் தொழுகைகளை) அவனை தொழுது வணங்குவீராக!
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக இவர்கள் (அவசரமான) உலக வாழ்க்கையை நேசிக்கின்றனர். அவர்களுக்கு முன்னர் இருக்கின்ற மிக கனமான ஒரு நாளை (-அந்நாளுக்காக நன்மைகளை சேகரிப்பதை) விட்டுவிடுகின்றனர்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம்தான் அவர்களை படைத்தோம், அவர்களின் படைப்பை (-உடல் உறுப்புகளை, மூட்டுகளை) உறுதிப்படுத்தினோம். நாம் நாடினால் (படைப்பால்) அவர்கள் போன்றவர்களை (ஆனால், அமல்களால் இவர்களுக்கு மாற்றமானவர்களை இவர்களுக்கு) பதிலாக நாம் கொண்டு வருவோம்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக இது ஓர் அறிவுரையாகும். யார் நாடுகிறாரோ அவர் தன் இறைவனின் பக்கம் ஒரு பாதையை ஏற்படுத்திக் கொள்ளட்டும்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் நாடினால் தவிர நீங்கள் நாடமுடியாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கின்றான்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் நாடுகின்றவர்களை தனது அருளில் அவன் நுழைக்கின்றான். அநியாயக்காரர்கள் - வலி தரக்கூடிய தண்டனையை அவர்களுக்காக அவன் தயார்செய்து வைத்துள்ளான்.