முகப்பு › அத்தியாயங்கள் › Al-Fajr அத்தியாயம்
Al-Fajr அத்தியாயம் الفجر
30 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 10
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلْفَجْرِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version விடியற் காலையின் மீது சத்தியமாக!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَلَيَالٍ عَشْرٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version பத்து நாள்களின் மீது சத்தியமாக!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இரட்டையின் மீது சத்தியமாக! ஒற்றையின் மீது சத்தியமாக!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَٱلَّيْلِ إِذَا يَسْرِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இரவின் மீது சத்தியமாக! அது செல்லும் போது, (தீர்ப்பு நாள் வந்தே தீரும்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌ لِّذِى حِجْرٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இதில் அறிவுடையவருக்கு (பலன் தரும்) சத்தியம் இருக்கிறதா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆது சமுதாயத்துடன் உம் இறைவன் எவ்வாறு நடந்துகொண்டான் (என்பதை நபியே!) நீர் கவனிக்கவில்லையா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (உயரமான) தூண்களுடைய இரம் (என்கிற ஆது சமுதாயம்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ٱلَّتِى لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى ٱلْبِلَٰدِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அது போன்று (பலசாலியான சமுதாயம் உலக) நகரங்களில் (வேறு எங்கும்) படைக்கப்படவில்லை.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَثَمُودَ ٱلَّذِينَ جَابُوا۟ ٱلصَّخْرَ بِٱلْوَادِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், பள்ளத்தாக்கில் பாறையைக் குடைந்(து வீடுகள் கட்டி வசித்)த ஸமூது சமுதாயத்தை (நீர் கவனிக்கவில்லையா?),
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَفِرْعَوْنَ ذِى ٱلْأَوْتَادِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், ஆணிகளுடைய ஃபிர்அவ்னை (நீர் கவனிக்கவில்லையா?) (ஆணிகள்: இராணுவங்கள்)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ٱلَّذِينَ طَغَوْا۟ فِى ٱلْبِلَٰدِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (அவர்கள்) நகரங்களில் (பாவம் செய்வதில்) வரம்பு மீறினார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَأَكْثَرُوا۟ فِيهَا ٱلْفَسَادَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் (அவர்கள்) அவற்றில் விஷமத்தை அதிகப்படுத்தினர்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version எனவே, உம் இறைவன் அவர்கள் மீது வேதனையின் சாட்டையை சுழற்றினான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّ رَبَّكَ لَبِٱلْمِرْصَادِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக உம் இறைவன் எதிர்பார்க்குமிடத்தில் இருக்கிறான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَأَمَّا ٱلْإِنسَٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكْرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَكْرَمَنِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக மனிதன், அவனுடைய இறைவன் அவனைச் சோதித்து, அவனைக் கண்ணியப்படுத்தி அவனுக்கு அருட்கொடை புரியும்போது, “என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான்” எனக் கூறுகிறான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَمَّآ إِذَا مَا ٱبْتَلَىٰهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَهَٰنَنِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக (இறைவன்), அவனைச் சோதித்து அவனுடைய வாழ்வாதாரத்தை அவன் மீது சுருக்கும்போது, “என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான்” எனக் கூறுகிறான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
كَلَّا بَل لَّا تُكْرِمُونَ ٱلْيَتِيمَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவ்வாறல்ல, மாறாக, நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவதில்லை. (அநாதைகளை கண்ணியமாக பராமரிப்பதில்லை).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் ஏழையின் உணவுக்கு (நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றவரை)த் தூண்டுவதில்லை.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَتَأْكُلُونَ ٱلتُّرَاثَ أَكْلًا لَّمًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Version பிறருடைய சொத்தை (உங்கள் சொத்தோடு) சேர்த்துப் புசிக்கிறீர்கள். (பிறர் விட்டுச் சென்ற செல்வத்தை உரிமையின்றி உங்கள் செல்வத்தோடு சுருட்டிக் கொள்கிறீர்கள்.)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّا جَمًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் செல்வத்தைக் கடுமையாக நேசிக்கிறீர்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
كَلَّآ إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّا دَكًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவ்வாறல்ல, பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَجَآءَ رَبُّكَ وَٱلْمَلَكُ صَفًّا صَفًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Version உம் இறைவன் வருவான், இன்னும் மலக்கு(கள்) அணி அணியாக (நிற்பார்கள்),
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَجِا۟ىٓءَ يَوْمَئِذٍۭ بِجَهَنَّمَ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكْرَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும், அந்நாளில் மனிதன் நல்லறிவு பெறுவான், (அப்போது) நல்லறிவு அவனுக்கு எப்படி (பலன் தரும்)?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
يَقُولُ يَٰلَيْتَنِى قَدَّمْتُ لِحَيَاتِى
Tamil Translation - Omar Sharif - Abridged Version “என் (மறுமை) வாழ்வுக்காக நான் (நன்மைகளை) முற்படுத்தியிருக்க வேண்டுமே!” எனக் கூறுவான்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அந்நாளில் அவனுடைய (-அல்லாஹ் வுடைய) வேதனையை(ப் போன்று) ஒருவனும் வேதனை செய்ய மாட்டான். (அல்லாஹ் பாவிகளை அவ்வளவு பயங்கரமாக வேதனை செய்வான்.)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவனுடைய (அல்லாஹ்வுடைய) கட்டு தலை(ப்போன்று) ஒருவனும் கட்ட மாட்டான். (பழுக்க சூடுகாட்டப்பட்ட சங்கிலிகளில் பாவிகளுடைய கைகள், கால்கள், கழுத்துகள் அந்தளவு கடுமையாகக் கட்டப்படும்.)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
يَٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிம்மதியடைந்த ஆன்மாவே!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً
Tamil Translation - Omar Sharif - Abridged Version திருப்தி பெற்றதாக, திருப்தி கொள்ளப்பட்டதாக உன் இறைவன் பக்கம் திரும்பு!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَٱدْخُلِى فِى عِبَٰدِى
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் என் அடியார்களில் சேர்ந்து விடு!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَٱدْخُلِى جَنَّتِى
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் என் சொர்க்கத்தில் நுழைந்து விடு!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
← Al-Ghaashiya அத்தியாயம்
Al-Balad அத்தியாயம் →
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
→
அரபு மூலமும் மொழிபெயர்ப்புகளும் Tanzil மற்றும் QuranEnc வழியாக — சொல்லுக்குச் சொல், மாற்றப்படாமல் · மொழிபெயர்ப்புகள் அவற்றின் மொழிபெயர்ப்பாளர்களுக்கு உரியவை; குர்ஆன் அல்ல
இது ஓர் ஆய்வு உதவியாகும்; மார்க்கத் தீர்ப்பின் ஆதாரம் அல்ல.