முகப்பு › அத்தியாயங்கள் › Al-Ghaashiya அத்தியாயம்
Al-Ghaashiya அத்தியாயம் الغاشية
26 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 68
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَٰشِيَةِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (நபியே!) சூழக்கூடிய (மறுமை தினத்)தின் செய்தி உமக்கு வந்ததா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وُجُوهٌ يَوْمَئِذٍ خَٰشِعَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (நிராகரிப்போரின்) முகங்கள் அந்நாளில் இழிவடையும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
عَامِلَةٌ نَّاصِبَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (அவை தண்டனையை) அனுபவிக்கும்; (வேதனையால் சிரமப்பட்டு) களைப்படையும்; (அவை உலகத்தில் வாழும்போது பாவங்களை நன்மையென எண்ணிச் செயல்பட்டவை; அவற்றில் உறுதியாக இருந்தவை; அவற்றைச் செய்வதில் களைத்தவை)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
تَصْلَىٰ نَارًا حَامِيَةً
Tamil Translation - Omar Sharif - Abridged Version (அவை) கடுமையாக எரியக்கூடிய நெருப்பில் பற்றி எரியும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version கொதிக்கக்கூடிய ஊற்றிலிருந்து (அவற்றுக்கு நீர்) புகட்டப்படும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவற்றுக்கு (-அவர்களுக்கு முட்களை உடைய) விஷச் செடியிலிருந்தே தவிர வேறு உணவு இல்லை.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (அது அவர்களைக்) கொழுக்க வைக்காது. (அவர்களின்) பசியைப் போக்(க பலனளிக்)காது.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (நம்பிக்கையாளர்களின்) முகங்கள் அந்நாளில் இன்புற்றிருக்கும்;
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
لِّسَعْيِهَا رَاضِيَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version தன் செயலுக்காக திருப்தியடைந்திருக்கும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فِى جَنَّةٍ عَالِيَةٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (அவை) உயர்வான சொர்க்கத்தில் இருக்கும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
لَّا تَسْمَعُ فِيهَا لَٰغِيَةً
Tamil Translation - Omar Sharif - Abridged Version அதில் (அவை) வீண் பேச்சை செவியுறாது.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فِيهَا عَيْنٌ جَارِيَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அதில் (தொடர்ந்து) ஓடக்கூடிய ஊற்று(கள்) இருக்கும்;
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அதில் உயர்வான கட்டில்கள் இருக்கும்;
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் (நதிகளுக்கு அருகில் நிரப்பி) வைக்கப்பட்ட குவளைகள் இருக்கும்;
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَنَمَارِقُ مَصْفُوفَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் (சாய்வதற்கு) வரிசையாக வைக்கப்பட்ட தலையணைகள் இருக்கும்;
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் விரிக்கப்பட்ட உயர்ரக விரிப்புகள் இருக்கும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (அவர்கள்) ஒட்டகத்தின் பக்கம் பார்க்க மாட்டார்களா? எவ்வாறு அது படைக்கப்பட்டுள்ளது? என்று
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் வானத்தின் பக்கம் (பார்க்க மாட்டார்களா?), எவ்வாறு அது உயர்த்தப்பட்டுள்ளது? என்று
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் மலைகளின் பக்கம் (பார்க்க மாட்டார்களா?), எவ்வாறு அது நிறுவப் பட்டுள்ளது? என்று
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் பூமியின் பக்கம் (பார்க்க மாட்டார்களா?), எவ்வாறு அது விரிக்கப்பட்டுள்ளது? என்று
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆகவே, அறிவுரை கூறுவீராக! நீரெல்லாம் அறிவுரை கூறுபவர்தான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர்களை நிர்ப்பந்திப்பவராக நீர் இல்லை.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version எனினும், யார் (அறிவுரையை விட்டு) விலகினாரோ, இன்னும் நிராகரித்தாரோ,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவரை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையால் வேதனை செய்வான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக அவர்களின் திரும்புதல் நம் பக்கம்தான் இருக்கிறது.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم
Tamil Translation - Omar Sharif - Abridged Version பிறகு நிச்சயமாக அவர்களை விசாரிப்பது நம் மீதே (பொறுப்பாக) இருக்கிறது. (ஆகவே, அவர்களின் செயல்களைக் கணக்கிட்டு அதற்குத் தகுந்த கூலி கொடுப்போம்.)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
← Al-A'laa அத்தியாயம்
Al-Fajr அத்தியாயம் →
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
→
அரபு மூலமும் மொழிபெயர்ப்புகளும் Tanzil மற்றும் QuranEnc வழியாக — சொல்லுக்குச் சொல், மாற்றப்படாமல் · மொழிபெயர்ப்புகள் அவற்றின் மொழிபெயர்ப்பாளர்களுக்கு உரியவை; குர்ஆன் அல்ல
இது ஓர் ஆய்வு உதவியாகும்; மார்க்கத் தீர்ப்பின் ஆதாரம் அல்ல.