caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Balad அத்தியாயம் البلد

20 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 35

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ لَآ أُقْسِمُ بِهَٰذَا ٱلْبَلَدِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇந்த (மக்கா) நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَأَنتَ حِلٌّۢ بِهَٰذَا ٱلْبَلَدِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீர் இந்நகரத்தில் (எதிரிகளைத் தண்டிக்க) அனுமதிக்கப்பட்டவர்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَوَالِدٍ وَمَا وَلَدَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதந்தையின் மீதும், அவர் பெற்றெடுத்ததின் மீதும் சத்தியமாக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِى كَبَدٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக, மனிதனை சிரமத்தில் (சிக்கிக் கொள்பவனாகவே) படைத்தோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதன்மீது ஒருவனும் ஆற்றல் பெறவே மாட்டான் என்று (அவன்) எண்ணுகிறானா?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதிகமான செல்வத்தை நான் அழித்தேன் என்று கூறுகிறான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனை ஒருவனும் பார்க்கவில்லை என்று எண்ணுகிறானா?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇரு கண்களை அவனுக்கு நாம் ஆக்கவில்லையா?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَلِسَانًا وَشَفَتَيْنِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒரு நாவையும், இரு உதடுகளையும் (அவனுக்கு நாம் ஆக்கவில்லையா)?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَهَدَيْنَٰهُ ٱلنَّجْدَيْنِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் இரு பாதைகளை அவனுக்கு வழிகாட்டினோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் ‘அகபா’வைக் கடக்கவில்லை.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநபியே!) “அகபா” என்றால் என்ன வென்று உமக்கு அறிவித்தது எது?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَكُّ رَقَبَةٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அது,) ஓர் அடிமையை விடுதலை செய்தல்,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَوْ إِطْعَٰمٌ فِى يَوْمٍ ذِى مَسْغَبَةٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லது, கடுமையான பசியுடைய நாளில் உணவளித்தல்,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَتِيمًا ذَا مَقْرَبَةٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(யாருக்கு என்றால்) உறவினரான ஓர் அனாதைக்கு,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லது, மிக வறியவரான ஓர் ஏழைக்கு உணவளித்தல் (அகபாவை கடப்பதாகும்).

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, நம்பிக்கையைக் கொண்டவர் களிலும், பொறுமையைக் கொண்டும் உபதேசித்துக் கொண்டவர்களிலும், கருணையைக் கொண்டும் உபதேசித்துக் கொண்டவர்களிலும் அவர் ஆகிவிட வேண்டும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்கள் வலப்பக்கமுடையவர்கள் (சொர்க்க வாசிகள்).

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِنَا هُمْ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம் வசனங்களை நிராகரித்தவர்கள்தான் இடப்பக்கமுடையவர்கள் (அவர்கள் நரகவாசிகள்)

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌۢ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர்கள் நரகத்தில் தள்ளப்பட்டப்பின் அந்)நரகம் அவர்கள் மீது மூடப்படும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70