caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ma'aarij அத்தியாயம் المعارج

44 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 79

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ سَأَلَ سَآئِلٌۢ بِعَذَابٍ وَاقِعٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நிராகரிப்பாளர்களுக்கு) நிகழக்கூடிய தண்டனையை (அது உடனே இறங்கட்டும் என்று) கேட்பவர் கேட்டார்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

لِّلْكَٰفِرِينَ لَيْسَ لَهُۥ دَافِعٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிராகரிப்பாளர்களுக்கு (அந்த தண்டனை நிகழும்). அதை தடுப்பவர் ஒருவரும் இல்லை.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

مِّنَ ٱللَّهِ ذِى ٱلْمَعَارِجِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉயர்வுகளும் மேன்மைகளும் உடைய அல்லாஹ்விடமிருந்து (அது நிகழும்).

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

تَعْرُجُ ٱلْمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيْهِ فِى يَوْمٍ كَانَ مِقْدَارُهُۥ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானவர்களும் ஜிப்ரீலும் அவன் பக்கம் ஒரு நாளில் ஏறுகின்றனர். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகளாக இருக்கிறது.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَٱصْبِرْ صَبْرًا جَمِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அழகிய பொறுமையாக நீர் பொறுப்பீராக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّهُمْ يَرَوْنَهُۥ بَعِيدًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக இவர்கள் அதை தூரமாக பார்க்கின்றனர்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَنَرَىٰهُ قَرِيبًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம் அதை சமீபமாக பார்க்கிறோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَوْمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلْمُهْلِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானம் எண்ணையின் அடி மண்டியைப் போல் ஆகிவிடும் நாளில்,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமலைகள் முடிகளைப் போல் ஆகிவிடும் நாளில் (அந்த வேதனை நிகழும்).

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَلَا يَسْـَٔلُ حَمِيمٌ حَمِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒரு நண்பன் (தனது) நண்பனைப் பற்றி விசாரிக்க மாட்டான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يُبَصَّرُونَهُمْ يَوَدُّ ٱلْمُجْرِمُ لَوْ يَفْتَدِى مِنْ عَذَابِ يَوْمِئِذٍۭ بِبَنِيهِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் அவர்களை (நண்பர்கள் நண்பர்களை) காண்பிக்கப்படுவார்கள். அந்நாளின் தண்டனையிலிருந்து (விடுதலை பெற) தன் பிள்ளைகளை ஈடாக கொடுக்க வேண்டுமே என்று குற்றவாளி ஆசைப்படுவான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَصَٰحِبَتِهِۦ وَأَخِيهِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், தன் மனைவியையும் தன் சகோதரனையும்,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَفَصِيلَتِهِ ٱلَّتِى تُـْٔوِيهِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், தன்னை அரவணைக்கின்ற தன் குடும்பத்தையும்,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَمَن فِى ٱلْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنجِيهِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், பூமியில் உள்ளவர்கள் அனைவரையும் (ஈடாக கொடுக்க வேண்டுமே என்று ஆசைப்படுவான்). பிறகு, அது அவனை பாதுகாக்க வேண்டும் (என்றும் அந்த குற்றவாளி ஆசைப்படுவான்).

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كَلَّآ إِنَّهَا لَظَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்வாறல்ல. நிச்சயமாக அது கொழுந்து விட்டெரியும் நெருப்பாகும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

نَزَّاعَةً لِّلشَّوَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(தலை இன்னும் உடலின்) தோலை கழட்டிவிடக் கூடியது அது.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

تَدْعُوا۟ مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅ(ந்த நெருப்பான)து (அல்லாஹ்வின் மார்க்கத்தை) புறக்கணித்து, விலகி சென்றவர்களை அழைக்கும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَجَمَعَ فَأَوْعَىٰٓ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், (செல்வங்களை) சேகரித்து, (அவற்றை) பாதுகாத்து வைத்தவனை (அது அழைக்கும்).

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّ ٱلْإِنسَٰنَ خُلِقَ هَلُوعًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக மனிதன் பேராசைக் காரனாக படைக்கப்பட்டான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனுக்கு தீங்கு ஏற்பட்டால் மிக பதட்டக் காரனாக,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِذَا مَسَّهُ ٱلْخَيْرُ مَنُوعًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனுக்கு வசதி ஏற்பட்டால் (பிறருக்கு கொடுக் காமல்) முற்றிலும் தடுப்பவனாக (படைக்கப்பட்டான்).

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِلَّا ٱلْمُصَلِّينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(ஆனால்,) தொழுகையாளிகளைத் தவிர.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَآئِمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் தங்கள் தொழுகையில் நிரந்தரமாக இருப்பார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلَّذِينَ فِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّ مَّعْلُومٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், அவர்களுடைய செல்வங்களில் குறிப்பிட்ட உரிமை உண்டு,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionயாசிப்பவருக்கும், இல்லாதவருக்கும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ ٱلدِّينِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், அவர்கள் கூலி நாளை உண்மைப் படுத்துவார்கள்,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلَّذِينَ هُم مِّنْ عَذَابِ رَبِّهِم مُّشْفِقُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், அவர்கள் தங்கள் இறைவனின் தண்டனையைப் பயப்படுவார்கள்,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُونٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அவர்களுடைய இறைவனின் தண்டனை பயமற்று இருக்கக் கூடியதல்ல.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَٰفِظُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், அவர்கள் தங்கள் மர்மஸ்தானங்களை பாதுகாப்பார்கள்,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِلَّا عَلَىٰٓ أَزْوَٰجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَٰنُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதங்கள் மனைவிகள்; அல்லது, தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடம் தவிர. நிச்சயமாக இவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَمَنِ ٱبْتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْعَادُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionயார் இதற்குப் பின் (தவறான ஆசையை) தேடுவார்களோ அவர்கள்தான் வரம்பு மீறிகள் ஆவர்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلَّذِينَ هُمْ لِأَمَٰنَٰتِهِمْ وَعَهْدِهِمْ رَٰعُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், அவர்கள் தங்கள் அமானிதங்களையும் தங்கள் ஒப்பந்தங்களையும் பேணுவார்கள்,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلَّذِينَ هُم بِشَهَٰدَٰتِهِمْ قَآئِمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், அவர்கள் தங்கள் சாட்சிகளை நிறைவேற்றுவார்கள்,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் அவர்கள் தங்கள் தொழுகையை பேணிப் பாதுகாப்பார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أُو۟لَٰٓئِكَ فِى جَنَّٰتٍ مُّكْرَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅ(த்தகைய)வர்கள் (அனைவரும்) சொர்க்கங்களில் கண்ணியப்படுத்தப்படுவார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَمَالِ ٱلَّذِينَ كَفَرُوا۟ قِبَلَكَ مُهْطِعِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, நிராகரித்தவர்களுக்கு என்ன ஆனது? அவர்கள் (ஏன்) உம் பக்கம் விரைந்து வருகிறார்கள்,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

عَنِ ٱلْيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவலது புறத்தில் இருந்தும் இடது புறத்தில் இருந்தும் பல கூட்டங்களாக.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَيَطْمَعُ كُلُّ ٱمْرِئٍ مِّنْهُمْ أَن يُدْخَلَ جَنَّةَ نَعِيمٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நம்பிக்கையாளர்களுடன் சேர்ந்து) தானும் “நயீம்” (-இன்பம் நிறைந்த) சொர்க்கத்தில் நுழைக்கப்பட வேண்டும் என்று அவர்களில் ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படுகின்றானா?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كَلَّآ إِنَّا خَلَقْنَٰهُم مِّمَّا يَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்வாறல்ல. நிச்சயமாக நாம் அவர்களை அவர்கள் அறிந்திருக்கின்ற ஒன்றிலிருந்துதான் (அற்பமான நீரிலிருந்துதான்) படைத்தோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَلَآ أُقْسِمُ بِرَبِّ ٱلْمَشَٰرِقِ وَٱلْمَغَٰرِبِ إِنَّا لَقَٰدِرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, கிழக்குகள், இன்னும் மேற்குகளுடைய இறைவன் மீது சத்தியம் செய்கிறேன்! நிச்சயம் நாம் ஆற்றல் உள்ளவர்கள்,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

عَلَىٰٓ أَن نُّبَدِّلَ خَيْرًا مِّنْهُمْ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்களை விட சிறந்தவர்களை மாற்றிக் கொண்டு வருவதற்கு (நாம் ஆற்றல் உள்ளவர்கள் ஆவோம்). நாம் பலவீனமானவர்கள் அல்ல.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَذَرْهُمْ يَخُوضُوا۟ وَيَلْعَبُوا۟ حَتَّىٰ يُلَٰقُوا۟ يَوْمَهُمُ ٱلَّذِى يُوعَدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களை விட்டுவிடுவீராக! அவர்கள் (தங்கள் பொய்களில்) ஈடுபடட்டும்! (தங்கள் உலக காரியங்களில்) விளையாடட்டும்! இறுதியாக, அவர்கள் எச்சரிக்கப்பட்ட அவர்களது (தண்டனைக்குரிய) நாளை அவர்கள் சந்திப்பார்கள்!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَوْمَ يَخْرُجُونَ مِنَ ٱلْأَجْدَاثِ سِرَاعًا كَأَنَّهُمْ إِلَىٰ نُصُبٍ يُوفِضُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் புதைக்குழிகளில் இருந்து விரைவாக வெளியேறுகின்ற நாளில், அவர்களோ (நிறுத்திவைக்கப்பட்டுள்ள) கம்பத்தின் பக்கம் விரைந்து ஓடுகின்றவர்கள் போல் இருப்பார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

خَٰشِعَةً أَبْصَٰرُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلَّذِى كَانُوا۟ يُوعَدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களின் பார்வைகள் (இழிவால்) கீழ்நோக்கி இருக்கும். அவர்களை இழிவு சூழ்ந்து கொள்ளும். இதுதான் இவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த நாளாகும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70