caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Mutaffifin அத்தியாயம் المطففين

36 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 86

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமோசடிக்காரர்களுக்குக் கேடுதான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ٱلَّذِينَ إِذَا ٱكْتَالُوا۟ عَلَى ٱلنَّاسِ يَسْتَوْفُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும்போது, (அளவையில் பொருளை) நிறைவாக வாங்குகின்றனர்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுக்காக (இவர்கள்) அளந்து கொடுக்கும் போது அல்லது அவர்களுக்காக நிறுத்துக் கொடுக்கும் போது (அளவையிலும் நிறுவையிலும்) குறைத்துக் கொடுக் கிறார்கள். (நஷ்டப்படுத்துகிறார்கள்.)

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَلَا يَظُنُّ أُو۟لَٰٓئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“நிச்சயமாக அவர்கள் (மறுமை நாளில் உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள்” நம்பவில்லையா?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

لِيَوْمٍ عَظِيمٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமகத்தான ஒரு நாளில் (எழுப்பப்படுவார்கள்).

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَوْمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلْعَٰلَمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅகிலத்தார்களின் இறைவனுக்கு முன் அந்நாளில் மக்கள் நிற்பார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْفُجَّارِ لَفِى سِجِّينٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்வாறல்ல, நிச்சயமாக தீயவர்களின் பதிவேடு சிஜ்ஜீனில்தான் இருக்கும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَمَآ أَدْرَىٰكَ مَا سِجِّينٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் சிஜ்ஜீன் என்ன(வென்று) உமக்கு அறிவித்தது எது?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كِتَٰبٌ مَّرْقُومٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அது பாவிகளின் விவரங்கள்) எழுதப்பட்ட ஒரு பதிவேடு.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ ٱلدِّينِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர்கள்) கூலி நாளைப் பொய்ப் பிக்கின்றனர்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபெரும் பாவி, வரம்பு மீறுகிறவன் எல்லோரையும் தவிர (மற்றெவரும்) அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் மீது நம் வசனங்கள் ஓதப்பட்டால், (அவை) முன்னோரின் கட்டுக் கதைகள் எனக் கூறுகிறான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كَلَّا بَلْ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்வாறல்ல, மாறாக, அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய)வை அவர்களின் உள்ளங்கள் மீது (துருவாகப் படிந்து) மூடின.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كَلَّآ إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்வாறல்ல, நிச்சயமாக அவர்கள் அந்நாளில் அவர்களுடைய இறைவனை விட்டுத் தடுக்கப்பட்டவர்கள்தான். (ஆகவே, அவர்கள் அல்லாஹ்வைக் காணவே மாட்டார்கள்.)

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا۟ ٱلْجَحِيمِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, நிச்சயமாக அவர்கள் ஜஹீம் என்ற நரகத்தில் (தீ பற்றி) எரியக் கூடியவர்கள்தான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, “நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தது இதுதான்” என்று கூறப்படும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْأَبْرَارِ لَفِى عِلِّيِّينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்வாறல்ல, நிச்சயமாக நல்லோரின் பதிவேடு இல்லிய்யூனில் தான் இருக்கும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَمَآ أَدْرَىٰكَ مَا عِلِّيُّونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) ‘இல்லிய்யூன்’ என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كِتَٰبٌ مَّرْقُومٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அது நல்லோரின் செயல்கள்) எழுதப்பட்ட ஒரு பதிவேடு.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَشْهَدُهُ ٱلْمُقَرَّبُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநெருக்கமான (வான)வர்கள் அதைக் கண்காணிக்கிறார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நல்லோர் ’நயீம்’ என்ற சொர்க்கத்தில்தான் இருப்பார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionகட்டில்கள் மீது (அமர்ந்தவாறு) பார்ப்பார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

تَعْرِفُ فِى وُجُوهِهِمْ نَضْرَةَ ٱلنَّعِيمِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களின் முகங்களில் இன்பத்தின் செழிப்பை (நபியே! நீர்) அறிவீர்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமுத்திரையிடப்பட்ட மதுவிலிருந்து புகட்டப்படுவார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

خِتَٰمُهُۥ مِسْكٌ وَفِى ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ ٱلْمُتَنَٰفِسُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதன் முத்திரை கஸ்தூரியாகும். ஆகவே, ஆசை வைப்போர் அதில் ஆசை வைக்கவும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَمِزَاجُهُۥ مِن تَسْنِيمٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் அதன் கலவை ’தஸ்னீம்’ லிருந்து (இருக்கும்).

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

عَيْنًا يَشْرَبُ بِهَا ٱلْمُقَرَّبُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(தஸ்னீம் அது) ஒரு நீரூற்று, நெருக்கமாக்கப்பட்டவர்கள் அதில் பருகுவார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ كَانُوا۟ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يَضْحَكُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக குற்றம் புரிந்தவர்கள் நம்பிக்கையாளர்களைப் பார்த்து சிரிப்பவர்களாக இருந்தார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِذَا مَرُّوا۟ بِهِمْ يَتَغَامَزُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் அவர்கள் (-குற்றவாளிகள்) அவர்களைக் கடந்து செல்லும்போது, (ஒருவருக்கொருவர்) கண் ஜாடை காட்டுகிறார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمُ ٱنقَلَبُوا۟ فَكِهِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் தங்கள் குடும்பத்தாரிடம் அவர்கள் திரும்பும்போது மகிழ்ச்சியாளர் களாகத் திரும்புகிறார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِذَا رَأَوْهُمْ قَالُوٓا۟ إِنَّ هَٰٓؤُلَآءِ لَضَآلُّونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் (-குற்றவாளிகள்) அவர்களைப் பார்க்கும்போது “நிச்சயமாக இவர்கள் வழிதவறியவர்கள்தான்” எனக் கூறுகிறார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَمَآ أُرْسِلُوا۟ عَلَيْهِمْ حَٰفِظِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(இப்பாவிகளுக்கு அவர்களைப் பற்றி ஏன் இவ்வளவு கவலை?) அவர்கள் மீது கண்காணிப்பவர்களாக இவர்கள் அனுப்பப்படவில்லையே!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَٱلْيَوْمَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنَ ٱلْكُفَّارِ يَضْحَكُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, (மறுமை நாளாகிய) இன்று நம்பிக்கையாளர்கள் நிராகரிப்பாளர்களைப் பார்த்து சிரிப்பார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionகட்டில்கள் மீது (அமர்ந்தவர்களாக பாவிகள் தண்டிக்கப்படுவதை) பார்ப்பார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

هَلْ ثُوِّبَ ٱلْكُفَّارُ مَا كَانُوا۟ يَفْعَلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிராகரிப்பாளர்கள் தாங்கள் செய்து கொண்டிருந்ததற்கு கூலி கொடுக்கப்பட்டார்களா?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70