caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Inshiqaaq அத்தியாயம் الإنشقاق

25 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 83

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானம் பிளந்துவிடும் போது,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது தன் இறைவனுக்குச் செவி சாய்த்தது இன்னும் கீழ்ப்படிந்தது,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், பூமி விரிக்கப்படும்போது,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், அது தன்னில் உள்ளவற்றை (வெளியே) எறிந்து, காலியாகி விடும்போது,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது தன் இறைவனுக்குச் செவி சாய்த்தது இன்னும் கீழ்ப்படிந்தது,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَٰقِيهِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவன் பக்கம் சிரமத்தோடு முயற்சிப் பவனாக இருக்கிறாய். அடுத்து நீ அவனை சந்திப்பாய்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, யார் தன் வலக்கரத்தில் தன் பதிவேடு கொடுக்கப்பட்டாரோ (அவர்),

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் இலகுவாகவே கணக்குக் கேட்கப்படுவார்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் மகிழ்ச்சியானவராகத் தன் குடும்பத்தார் பக்கம் திரும்புவார்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, யார் தன் பதிவேடு தன் முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்பட்டானோ,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாசமே! என அவன் கூவுவான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَيَصْلَىٰ سَعِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version’சயீர்’ என்ற நரகத்தில் அவன் பொசுங்குவான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அவன் (உலகில்) தன் குடும்பத்தில் மகிழ்ச்சியானவனாக இருந்தான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அவன், (தன் இறைவனிடம்) திரும்பிவரவே மாட்டான் என எண்ணினான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஏனில்லை! நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனை உற்று நோக்குபவனாக இருக்கிறான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, செம்மேகத்தின் மேல் சத்தியமிடுகிறேன்!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلَّيْلِ وَمَا وَسَقَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇரவின் மீது சத்தியமாக! (அது) ஒன்று சேர்த்தவை மீது சத்தியமாக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionசந்திரன் மீது சத்தியமாக! அது (பூரண நிலவாக) முழுமையடையும்போது,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒரு நிலையிலிருந்து ஒரு நிலைக்கு நிச்சயமாகப் பயணிக்கிறீர்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது)? அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் மீது அல்குர்ஆன் ஓதப்பட்டால், அவர்கள் சிரம் பணிவதில்லை.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமாறாக, நிராகரிப்பாளர்கள் (இந்த குர்ஆனை) பொய்ப்பிக்கின்றனர்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் (தங்கள் உள்ளங்களில்) சேகரிப்பதை (-மறைப்பதை) அல்லாஹ் மிக அறிந்தவன்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர்களில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களைத் தவிர, அவர்களுக்கு முடிவுறாத (கணக்கற்ற, குறையாத) நன்மை உண்டு.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70