caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Infitaar அத்தியாயம் الإنفطار

19 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 82

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(யுக முடிவில்) வானம் பிளந்துவிடும் போது,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் நட்சத்திரங்கள் விழுந்து சிதறும் போது,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் கடல்கள் பிளக்கப்ப(ட்)டு (ஒன்றோடு ஒன்று கலக்கப்படு)ம் போது,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் சமாதிகள் புரட்டப்படும்போது (அதில் உள்ளவர்கள் உயிரோடு எழுப்பப்படும்போது),

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஓர் ஆன்மா, தான் முற்படுத்தியதையும் (-முன்னர் செய்ததையும்), பிற்படுத்தியதையும் (-இறுதியாக செய்ததையும்) அறியும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமனிதனே! கண்ணியவானாகிய உன் இறைவனைப் பற்றி உன்னை ஏமாற்றியது எது?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவன்தான்) உன்னைப் படைத்தான்; இன்னும் உன்னைச் சீர்செய்தான்; இன்னும் உன்னை (தான் விரும்பிய உருவத்திற்கு) திருப்பினான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فِىٓ أَىِّ صُورَةٍ مَّا شَآءَ رَكَّبَكَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎந்த உருவத்தில் நாடினானோ (அதில்) உன்னைப் பொறுத்தினான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்வாறல்ல, மாறாக, கூலி கொடுக்கப்படுவதை (விசாரணை நாளை)பொய்ப்பிக்கிறீர்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِنَّ عَلَيْكُمْ لَحَٰفِظِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக (உங்கள் செயல்களை கண்காணித்து பதிவு செய்கிற வானவக்) காவலர்கள் உங்களிடம் இருக்கிறார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كِرَامًا كَٰتِبِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர்கள்,) கண்ணியமானவர்கள், எழுதுபவர்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் செய்வதை அவர்கள் அறிகிறார்கள் (பிறகு அதைப் பதிகிறார்கள்).

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நல்லோர் ‘நயீம்’ என்ற சொர்க்கத்தில்தான் இருப்பார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாகத் தீயோர் ’ஜஹீம்’ என்ற நரகத்தில்தான் இருப்பார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionகூலி (வழங்கப்படும்) நாளில் அதில் (நரக நெருப்பில்) எரிவார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَمَا هُمْ عَنْهَا بِغَآئِبِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் அவர்கள் அதிலிருந்து மறைபவர்களாக (தூரமாகக் கூடியவர்களாக) இல்லை. (நரகத்திலிருந்து அவர்களால் தப்ப முடியாது.)

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் (நபியே!) கூலி நாள் (விசாரணை நாள், தீர்ப்பு நாள்) என்ன(வென்று) உமக்கு அறிவித்தது எது?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, கூலி நாள் என்ன(வென்று) உமக்கு அறிவித்தது எது?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْـًٔا وَٱلْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஓர் ஆன்மா, (வேறு) ஓர் ஆன்மாவுக்கு எதையும் உரிமை பெறாத நாள் (அது). அதிகாரம் அந்நாளில் அல்லாஹ்விற்கே!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70