كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِىَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்வாறல்ல! (-தங்களின் இணைவைத்தலுக்காகவும் பாவங்களுக்காகவும் தாங்கள் தண்டிக்கப்பட மாட்டோம் என்று இணைவைப்பவர்கள் எண்ணுவது போல் அல்ல. பாவியின்) உயிர் (பிரிகின்ற நேரத்தில் அது) தொண்டைக் குழியை அடைந்தால்,
Tamil Translation - Omar Sharifஅவ்வாறல்ல! (-அவர்கள் தங்களது இணைவைத்தலுக்காகவும் பாவங்களுக்காகவும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று நினைப்பது போல் அல்ல. பாவிகளின்) உயிர் (பிரிகின்ற நேரத்தில் அது) தொண்டைக் குழியை அடைந்தால்,
Tamil Translation - Abdulhamid Baqawi26. எனினும், (எவனேனும் நோய்வாய்ப்பட்டு, அவனின்) உயிர் தொண்டைக் குழியை அடைந்துவிட்டால்,