caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Saad அத்தியாயம், வசனம் 17

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 38 · 38:17

ٱصْبِرْ عَلَىٰ مَا يَقُولُونَ وَٱذْكُرْ عَبْدَنَا دَاوُۥدَ ذَا ٱلْأَيْدِ إِنَّهُۥٓ أَوَّابٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் கூறுவதை சகிப்பீராக! நமது அடியார் (அல்லாஹ்வின் விஷயத்தில், அல்லாஹ்வை வணங்குவதில்) மிக வலிமை, உறுதி உடைய தாவூதை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் (அல்லாஹ்வின் பக்கம்) முற்றிலும் திரும்பக்கூடியவர் ஆவார்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) அவர்கள் கூறுவதை சகிப்பீராக! (அல்லாஹ்வின் விஷயத்தில், அல்லாஹ்வை வணங்குவதில்) மிக வலிமை, உறுதி உடைய நமது அடியார் தாவூதை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் (அல்லாஹ்வை அதிகம் வணங்குவதன் மூலம் அவன் பக்கம்) முற்றிலும் திரும்பக் கூடியவர் ஆவார்.
Tamil Translation - Abdulhamid Baqawi17. (நபியே!) இவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையாக சகித்துக்கொண்டு இருப்பீராக. மேலும், மிக பலசாலியாகிய நம் அடியார் தாவூதை நினைத்துப் பார்ப்பீராக. நிச்சயமாக அவர் (எத்தகைய சிரமத்திலும்) நம்மையே நோக்கி நின்றார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70