أَءُنزِلَ عَلَيْهِ ٱلذِّكْرُ مِنۢ بَيْنِنَا بَلْ هُمْ فِى شَكٍّ مِّن ذِكْرِى بَل لَّمَّا يَذُوقُوا۟ عَذَابِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநமக்கு மத்தியில் (-மனிதராக வாழ்கின்ற) அவர் மீது வேதம் இறக்கப்பட்டதா? (என்று கேலி செய்கின்றனர்.) மாறாக அவர்கள் எனது வேதத்தில் சந்தேகத்தில் இருக்கின்றனர். மாறாக, அவர்கள் (இதுவரை) எனது வேதனையை சுவைக்கவில்லை. (அப்படி சுவைத்திருந்தால் இந்த வேதத்தை உடனே நம்பியிருப்பார்கள்.)
Tamil Translation - Omar Sharif“நமக்கு மத்தியில் (-மனிதராக வாழ்கிற) அவர் மீது வேதம் இறக்கப்பட்டதா?” (என்று கேலி செய்தனர்.) மாறாக, அவர்கள் எனது வேதத்தில் சந்தேகத்தில் இருக்கிறார்கள். மாறாக, அவர்கள் (இதுவரை) எனது தண்டனையை சுவைக்கவில்லை. (அப்படி சுவைத்திருந்தால் இந்த வேதத்தை உடனே நம்பியிருப்பார்கள்.)
Tamil Translation - Abdulhamid Baqawi8. ‘‘நம்மைவிட்டு இவர் பேரில் மட்டும்தானா (வேத) உபதேசம் இறக்கப்பட்டு விட்டது'' (என்றும் கூறினார்கள்). அவ்வாறன்று. உண்மையில் இவர்கள் நம் எச்சரிக்கையைப் பற்றியே பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர். மேலும், இதுவரை அவர்கள் நம் வேதனையைச் சுவைத்துப் பார்க்கவே இல்லை.