كِتَٰبٌ أَنزَلْنَٰهُ إِلَيْكَ مُبَٰرَكٌ لِّيَدَّبَّرُوٓا۟ ءَايَٰتِهِۦ وَلِيَتَذَكَّرَ أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇது அருள் நிறைந்த ஒரு வேதமாகும். இதன் வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுள்ளவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் இதை நாம் உமக்கு இறக்கினோம்.
Tamil Translation - Omar Sharifஇது, அபிவிருத்தி செய்யப்பட்ட (அதிக நன்மைகளுடைய அருள் நிறைந்த) ஒரு வேதமாகும். இதன் வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுள்ளவர்கள் (இதன் மூலம்) நல்லுபதேசம் பெறுவதற்காகவும் இதை நாம் உமக்கு இறக்கினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi29. (நபியே!) இவ்வேதத்தை நாமே உம் மீது இறக்கிவைத்தோம். இது மிக பாக்கியமுள்ளது. அறிவுடையவர்கள் இதன் வசனங்களை கவனித்து ஆராய்ந்து நல்லுணர்ச்சி பெறுவார்களாக!