قَالُوا۟ بَلْ أَنتُمْ لَا مَرْحَبًۢا بِكُمْ أَنتُمْ قَدَّمْتُمُوهُ لَنَا فَبِئْسَ ٱلْقَرَارُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(பாவிகள்) கூறுவார்கள்: மாறாக, நீங்கள்தான் (நாங்கள் இங்கு வருவதற்கு காரணமாக இருந்தீர்கள்). உங்களுக்கு இங்கு வசதி கிடைக்காமல் போகட்டும். நீங்கள்தான் இவற்றை எங்களுக்கு முற்படுத்தினீர்கள். (எங்கள் பாவங்களுக்கு நீங்கள்தான் காரணம்.) தங்குமிடங்களில் நரகம் மிகக் கெட்ட இடமாகும்.
Tamil Translation - Omar Sharif(பாவிகள்) கூறுவார்கள்: “மாறாக, நீங்கள்தான் (நாங்கள் இங்கு வருவதற்கு காரணமாக இருந்தீர்கள்). உங்களுக்கு இங்கு வசதி கிடைக்காமல் போகட்டும். நீங்கள்தான் இவற்றை எங்களுக்கு முற்படுத்தினீர்கள். (எங்கள் பாவங்களுக்கு நீங்கள்தான் காரணம்.)” ஆக, (அவர்களது தங்குமிடம்) மிகக் கெட்ட தங்குமிடமாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi60. அதற்கு அ(த்தலை)வர்கள் (பின் தொடர்ந்த) அவர்களை நோக்கி, ‘‘(எங்களுக்கு) இல்லை. மாறாக, உங்களுக்குத்தான் நல்வரவில்லை. நீங்கள் தான் எங்களுக்கு இதைத் தேடித்தந்தீர்கள். (ஆதலால், நம்மிருவரின்) தங்குமிடம் மகா கெட்டதுதான்'' என்று கூறுவார்கள்.