كَمْ أَهْلَكْنَا مِن قَبْلِهِم مِّن قَرْنٍ فَنَادَوا۟ وَّلَاتَ حِينَ مَنَاصٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்களுக்கு முன்னர் எத்தனையோ பல தலைமுறை(மக்)களை நாம் அழித்தோம். (நம் வேதனை வந்தபோது அவர்கள் நம்மிடம் மன்றாடி பிரார்த்தித்து நம்மை) அழைத்தனர். (ஆனால், வேதனை வந்த) அந்த நேரம் தப்பித்து ஓடுவதற்குரிய நேரம் அல்ல.
Tamil Translation - Omar Sharifஇவர்களுக்கு முன்னர் எத்தனையோ பல தலைமுறைகளை நாம் அழித்தோம். ஆக, (நம் தண்டனை வந்தபோது அவர்கள் நம்மிடம் மன்றாடி பிரார்த்தித்து நம்மை) அழைத்தனர். (ஆனால், தண்டனை வந்த) அந்த நேரம் தப்பித்து ஓடுவதற்குரிய நேரம் அல்ல.
Tamil Translation - Abdulhamid Baqawi3. இவர்களுக்கு முன்னர், (இவ்வாறு இருந்த) எத்தனையோ வகுப்பாரை நாம் அழித்திருக்கிறோம். (வேதனை வந்த சமயத்தில்) அவர்கள் எல்லோரும் உதவி தேடிக் கூச்சலிட்டார்கள். அது (வேதனையிலிருந்து) தப்பித்துக் கொள்ளக்கூடிய நேரமாய் இருக்கவில்லை.