وَعَجِبُوٓا۟ أَن جَآءَهُم مُّنذِرٌ مِّنْهُمْ وَقَالَ ٱلْكَٰفِرُونَ هَٰذَا سَٰحِرٌ كَذَّابٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களில் இருந்தே ஓர் எச்சரிப்பாளர் அவர்களிடம் வந்ததால் அவர்கள் ஆச்சரியப்பட்டனர். நிராகரிப்பாளர்கள் (அவரைப் பற்றி) கூறினர்: “இவர் ஒரு சூனியக்காரர், ஒரு பெரும் பொய்யர்.”
Tamil Translation - Omar Sharifஅவர்களில் இருந்தே ஓர் எச்சரிப்பாளர் அவர்களிடம் வந்ததால் அவர்கள் ஆச்சரியப்பட்டனர். இன்னும், நிராகரிப்பாளர்கள் (அவரைப் பற்றி,) “இவர் ஒரு சூனியக்காரர், ஒரு பெரும் பொய்யர்” என்று கூறினார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi4. (அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய ஒரு தூதர் (ஆகிய நீர்) அவர்களி(ன் இனத்தி)லிருந்தே அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்டு, ‘‘இவர் மிகப் பொய் சொல்லும் சூனியக்காரர்தான்'' என்று (உங்களைப் பற்றி) அந்த நிராகரிப்பாளர்கள் கூறுகின்றனர்.