caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Saad அத்தியாயம், வசனம் 44

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 38 · 38:44

وَخُذْ بِيَدِكَ ضِغْثًا فَٱضْرِب بِّهِۦ وَلَا تَحْنَثْ إِنَّا وَجَدْنَٰهُ صَابِرًا نِّعْمَ ٱلْعَبْدُ إِنَّهُۥٓ أَوَّابٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉமது கரத்தால் ஒரு பிடி புல்லை எடுப்பீராக! அதன்மூலம் அடிப்பீராக! நீர் சத்தியத்தை முறிக்காதீர்! நிச்சயமாக நாம் அவரை பொறுமையாளராக கண்டோம். அவர் சிறந்த அடியார். நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் பக்கமே திரும்பியவர் ஆவார்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (அவருக்கு கூறினோம்:) “உமது கரத்தால் ஒரு பிடி புல்லை எடுப்பீராக! ஆக, அதன்மூலம் (பூமியில்) அடிப்பீராக! நீர் (செய்த) சத்தியத்தை முறிக்காதீர்!” நிச்சயமாக நாம் அவரை பொறுமையாளராக கண்டோம். அவர் சிறந்த அடியார். நிச்சயமாக அவர் (இன்பத்திலும் துன்பத்திலும் எல்லா நிலையிலும்) அல்லாஹ்வின் பக்கமே திரும்பியவர் ஆவார்.
Tamil Translation - Abdulhamid Baqawi44. ‘‘ஒரு பிடி (புல்) கத்தையை எடுத்து, அதைக்கொண்டு (உமது மனைவியை) அடிப்பீராக. நீர் உமது சத்தியத்தை முறிக்க வேண்டியதில்லை'' (என்று கூறினோம்.) நிச்சயமாக நாம், அவரை மிக்க பொறுமை உடையவராகவே கண்டோம். அவர் மிக்க நல்லடியார். நிச்சயமாக அவர் (ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை) நோக்கினவராகவே இருந்தார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70