وَٱنطَلَقَ ٱلْمَلَأُ مِنْهُمْ أَنِ ٱمْشُوا۟ وَٱصْبِرُوا۟ عَلَىٰٓ ءَالِهَتِكُمْ إِنَّ هَٰذَا لَشَىْءٌ يُرَادُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் சென்று, உங்கள் தெய்வங்கள் மீது உறுதியாக இருங்கள்! நிச்சயமாக (முஹம்மது கூறுகின்ற) இது (நமக்கு தீமையும் அவருக்கு தலைமைத்துவமும்) நாடப்பட்ட ஒரு விஷயம்தான் என்று கூறி அவர்களில் உள்ள தலைவர்கள் சென்றனர்.
Tamil Translation - Omar Sharif“நீங்கள் சென்று, உங்கள் தெய்வங்களை வழிபடுவதில் உறுதியாக இருங்கள்! நிச்சயமாக (முஹம்மத் கூறுகின்ற) இது (நமக்கு தீமையும் அவருக்கு தலைமைத்துவமும்) நாடப்பட்ட ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது” என்று கூறியவர்களாக அவர்களில் உள்ள பிரமுகர்கள் (ஆலோசனை சபையிலிருந்து கலைந்து) சென்றனர்.
Tamil Translation - Abdulhamid Baqawi6. அவர்களிலுள்ள தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி, ‘‘இவரை விட்டு) நீங்கள் சென்றுவிடுங்கள். உங்கள் தெய்வங்களை ஆராதனை செய்வதில் நீங்கள் உறுதியாயிருங்கள். (உங்கள் தெய்வங்களைக் கைவிடும்படி கூறும்)இவ்விஷயத்தில் ஏதோ (ஒரு சுயநலம்தான்) கருதப்படுகிறது'' என்று கூறிக் கொண்டே சென்று விட்டனர்.