وَٱذْكُرْ عَبْدَنَآ أَيُّوبَ إِذْ نَادَىٰ رَبَّهُۥٓ أَنِّى مَسَّنِىَ ٱلشَّيْطَٰنُ بِنُصْبٍ وَعَذَابٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநமது அடியார் அய்யூபை நினைவு கூர்வீராக! நிச்சயமாக எனக்கு களைப்பையும் இன்னும் வலியையும் ஷைத்தான் ஏற்படுத்தி விட்டான் என்று அவர் தன் இறைவனை அழைத்(து பிரார்த்தித்)த போது (நாம் கூறினோம்).
Tamil Translation - Omar Sharifஇன்னும். நமது அடியார் அய்யூபை நினைவு கூர்வீராக! நிச்சயமாக எனக்கு களைப்பையும் வலியையும் ஷைத்தான் ஏற்படுத்தி விட்டான் என்று அவர் தன் இறைவனை அழைத்(து பிரார்த்தித்)த சமயத்தில்,
Tamil Translation - Abdulhamid Baqawi41. (நபியே!) நம் அடியார் ஐயூபை நினைத்துப் பார்ப்பீராக. அவர் தன் இறைவனிடம் பிரார்த்தனை செய்தபொழுது ‘‘நிச்சயமாக எனக்கு ஷைத்தான் துன்பத்தையும் வேதனையையும் கொடுத்து விட்டான்'' (என்று கூறினார்.)