caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Saad அத்தியாயம், வசனம் 22

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 38 · 38:22

إِذْ دَخَلُوا۟ عَلَىٰ دَاوُۥدَ فَفَزِعَ مِنْهُمْ قَالُوا۟ لَا تَخَفْ خَصْمَانِ بَغَىٰ بَعْضُنَا عَلَىٰ بَعْضٍ فَٱحْكُم بَيْنَنَا بِٱلْحَقِّ وَلَا تُشْطِطْ وَٱهْدِنَآ إِلَىٰ سَوَآءِ ٱلصِّرَٰطِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் தாவூத் (நபி) இடம் நுழைந்த போது அவர் அவர்களைப் பார்த்து திடுக்கிற்றார். அவர்கள் கூறினர்: பயப்படாதீர். நாங்கள் இரு வழக்காளிகள். எங்களில் ஒருவர் ஒருவர் மீது அநியாயம் செய்தார். ஆகவே! எங்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிப்பீராக! அநீதி இழைத்து விடாதீர். நேரான பாதையின் பக்கம் எங்களுக்கு வழிகாட்டுவீராக!
Tamil Translation - Omar Sharifஅவர்கள் தாவூத் (நபி) இடம் (திடீரென) நுழைந்த போது அவர் அவர்களைப் பார்த்து திடுக்கிட்டார். அவர்கள் கூறினார்கள்: பயப்படாதீர். நாங்கள் இரு வழக்காளிகள். எங்களில் ஒருவர், (மற்ற) ஒருவர் மீது அநியாயம் செய்தார். ஆகவே! எங்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிப்பீராக! அநீதி இழைத்து விடாதீர். நேரான பாதையின் பக்கம் எங்களுக்கு வழிகாட்டுவீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi22. தாவூதிடம் நுழைந்தபோது, அவர் அவர்களைப் பற்றி(ப் பயந்து) திடுக்கமுற்றார். அதற்கவர்கள் ‘‘(தாவூதே!) பயப்படாதீர். (நாங்கள் இருவரும்) இரு கட்சிக்காரர்கள். எங்களில் ஒருவர் மற்றொருவர் மீது அநியாயம் செய்திருக்கிறார். எங்களுக்கிடையில் நீர் நீதமாகத் தீர்ப்பளிப்பீராக. அதில் தவறிழைத்து விடாதீர். எங்களை நேரான வழியில் செலுத்துவீராக.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70