caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'laa அத்தியாயம் الأعلى

19 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 8

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) மிக உயர்ந்தவனாகிய உம் இறைவனின் பெயரைத் துதித்து தூய்மைப் படுத்துவீராக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் படைத்தான்; இன்னும் ஒழுங்கு படுத்தினான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلَّذِى قَدَّرَ فَهَدَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் நிர்ணயம் செய்தான்; இன்னும் வழிகாட்டினான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلَّذِىٓ أَخْرَجَ ٱلْمَرْعَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் பசுமையான புல்லை வெளியாக்கினான். (முளைக்க வைத்தான்.)

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(பிறகு) அதைக் கருத்த (காய்ந்துபோன) சருகாக ஆக்கினான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰٓ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே! அல் குர்ஆனை) உமக்குக் கற்பிப்போம். ஆக, (அதிலிருந்து எதையும்) நீர் மறக்க மாட்டீர்,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِلَّا مَا شَآءَ ٱللَّهُ إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ وَمَا يَخْفَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் நாடியதைத் தவிர. நிச்சயமாக அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் நன்கறிவான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionசொர்க்கப் பாதையை உமக்கு இலகுவாக்கு வோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அறிவுரை பலனளித்தால் அறிவுரை கூறுவீராக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அல்லாஹ்வை) பயப்படுகிறவர் (அதன் மூலம்) அறிவுரை பெறுவார்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَيَتَجَنَّبُهَا ٱلْأَشْقَى

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் பெரும் துர்ப்பாக்கியவான் அதைத் தவிர்த்துவிடுவான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ٱلَّذِى يَصْلَى ٱلنَّارَ ٱلْكُبْرَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவன்) மாபெரும் (நரக) நெருப்பில் பற்றி எரிவான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, அதில் மரணிக்கவும் மாட்டான்; இன்னும் வாழவும் மாட்டான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(இஸ்லாமை ஏற்று) பரிசுத்தமடைந்தவர் திட்டமாக வெற்றி பெற்றார்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَذَكَرَ ٱسْمَ رَبِّهِۦ فَصَلَّىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் (அவர்) தன் இறைவனின் பெயரை நினைவு கூர்ந்தார்; இன்னும் (ஐவேளை) தொழுதார்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

بَلْ تُؤْثِرُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமாறாக, (அற்ப) உலக வாழ்வைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلْـَٔاخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰٓ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமறுமையோ மிகச் சிறந்ததும் என்றும் நிலையானதுமாகும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّ هَٰذَا لَفِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமுந்திய வேதங்களில் நிச்சயமாக இது (கூறப்பட்டு) இருக்கிறது,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

صُحُفِ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇப்ராஹீம் உடைய இன்னும் மூஸா உடைய வேதங்களில் (கூறப்பட்டிருக்கிறது).

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70