فَنَادَوْا۟ صَاحِبَهُمْ فَتَعَاطَىٰ فَعَقَرَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அந்த ஒட்டகத்தைக் கொல்வதற்காக) அவர்கள் தங்கள் தோழரை அழைத்தனர். அவன் (தனது கரத்தால் அதைப்) பிடித்து, அறுத்தான்.
Tamil Translation - Omar Sharifஆக, (அந்த ஒட்டகத்தைக் கொல்வதற்காக) அவர்கள் தங்கள் நண்பனை அழைத்தனர். ஆக, அவன் (தனது கரத்தால் அதைப்) பிடித்தான், ஆக, அவன் (அதை) அறுத்து விட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi29. எனினும், அவர்கள் (கத்தார் என்னும்) தங்கள் நண்பனை அழைத்தனர். அவன் அதை வெட்டி, அதன் கால் நரம்புகளைத் தறித்து விட்டான்.