caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qamar அத்தியாயம், வசனம் 9

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 37 · 54:9

كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ فَكَذَّبُوا۟ عَبْدَنَا وَقَالُوا۟ مَجْنُونٌ وَٱزْدُجِرَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்கள் பொய்ப்பித்தனர். ஆக, அவர்கள் நமது அடியாரை பொய்ப்பித்தனர். (அது மட்டுமா!) அவர் ஒரு பைத்தியக்காரர் என்று(ம்) கூறினர். இன்னும் அவர் (அவர்களால் கடுமையாக) எச்சரிக்கப்பட்டார்.
Tamil Translation - Omar Sharif(குறைஷிகளாகிய) இவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்கள் (தூதர்களை) பொய்ப்பித்தனர். ஆக, அவர்கள் நமது அடியாரை பொய்ப்பித்தனர். (அது மட்டுமா!) அவர் ஒரு பைத்தியக்காரர் என்று(ம்) கூறினார்கள். இன்னும், அவர் (அவர்களால் கடுமையாக) எச்சரிக்கப்பட்டார்.
Tamil Translation - Abdulhamid Baqawi9. (இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்த நூஹுடைய மக்களும் (அந்த நாளைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்கள் (அதைப் பற்றி எச்சரிக்கை செய்த) நம் (தூதராகிய) அடியாரைப் பொய்யாக்கியதுடன், அவரைப் பைத்தியக்காரனென்று கூறி (அவரை துன்புறுத்துவதாக) மிரட்டிக்கொண்டும் இருந்தார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70