முகப்பு › அத்தியாயங்கள் › At-Takwir அத்தியாயம்
At-Takwir அத்தியாயம் التكوير
29 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 7
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (உலக முடிவுக்காகச்) சூரியன் மங்க வைக்கப்படும்போது,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும்போது,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் மலைகள் அகற்றப்படும்போது,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் நிறைமாத ஒட்டகங்கள் கவனிப்பற்று விடப்படும்போது,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் காட்டு மிருகங்கள் (ஊர்களில்) ஒன்று சேர்க்கப்படும்போது,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் கடல்கள் தீ மூட்டப்படும்போது (இவ்வுலகம் முடிவுறும்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் உயிர்கள் (உடலுடன்) இணைக்கப்படும்போது,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தை விசாரிக்கப்படும்போது,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
بِأَىِّ ذَنۢبٍ قُتِلَتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவள் எந்தக் குற்றத்திற்காக கொல்லப் பட்டாள்? என்று.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் (செயல்கள் எழுதப்பட்ட) ஏடுகள் விரிக்கப்படும்போது,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் வானம் அகற்றப்படும் போது,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் நரகம் கடுமையாக எரிக்கப்படும் போது,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் சொர்க்கம் சமீபமாக்கப்படும் போது,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
عَلِمَتْ نَفْسٌ مَّآ أَحْضَرَتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஓர் ஆன்மா தான் கொண்டு வந்ததை அறியும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, (பகலில்) மறைந்துவிடுபவை மீது சத்தியம் செய்கிறேன்!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version விரைந்து வேகமாகச் செல்கின்றவை, பிறகு, சென்ற பாதையில் அப்படியே திரும்பிவருகின்றவை (மீது சத்தியமாக!)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இரவின் மீது சத்தியமாக அது பின்செல்லும்போது,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version காலைப்பொழுதின் மீது சத்தியமாக அது தெளிவாகி விடும்போது,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக இது (-இந்த குர்ஆன்) கண்ணியத்திற்குரியவரான தூதர் (ஜிப்ரயீல்) உடைய கூற்றாகும் (-அவர் மூலம் இறக்கப்பட்ட இறை வேதமாகும்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (அவர்) பலமுடையவர், அர்ஷுடையவனிடம் பதவி உடையவர்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அங்கு (வானவர்களின்) கீழ்ப்படிதலுக்கு உரியவர், (அல்லாஹ்விடம்) நம்பிக்கைக்குரியவர். (அத்தகைய வானவத் தூதர் ஜிப்ரயீல் வாயிலாக இறக்கப்பட்ட கூற்றாகும் இந்த குர்ஆன்.)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version உங்கள் தோழர் (-நபி முஹம்மது) பைத்தியக்காரராக இல்லை.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version திட்டவட்டமாக, தெளிவான (வானக்) கோடியில் அவர் (-நபி முஹம்மது) அவரை (-ஜிப்ரயீலை)க் கண்டார்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version மறைவானவற்றில் (அல்லாஹ் இறக்கிய வேதத்தை மக்களுக்கு கற்பிப்பதில்) அவர் கஞ்சனாக (-குறைவு செய்பவராக) இல்லை.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَٰنٍ رَّجِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அது (-குர்ஆன்) எறியப்பட்ட ஷைத்தானின் கூற்றாக இல்லை.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَأَيْنَ تَذْهَبُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆகவே, (இதனை விட்டு) நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَٰلَمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அது அகிலத்தார்களுக்கு ஓர் அறிவுரை யாகவே தவிர (வேறு) இல்லை.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version உங்களில் நேர்வழி நடக்க நாடியவருக்கு (அது அறிவுரையாகும், அவர் அதன் மூலம் நல்லறிவு பெறுவார்.)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَٰلَمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அகிலத்தார்களின் இறைவனான அல்லாஹ் நாடினால் தவிர, (நல்லறிவு பெற நீங்கள்) நாடமாட்டீர்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
← Abasa அத்தியாயம்
Al-Infitaar அத்தியாயம் →
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
→
அரபு மூலமும் மொழிபெயர்ப்புகளும் Tanzil மற்றும் QuranEnc வழியாக — சொல்லுக்குச் சொல், மாற்றப்படாமல் · மொழிபெயர்ப்புகள் அவற்றின் மொழிபெயர்ப்பாளர்களுக்கு உரியவை; குர்ஆன் அல்ல
இது ஓர் ஆய்வு உதவியாகும்; மார்க்கத் தீர்ப்பின் ஆதாரம் அல்ல.