Al-Lail அத்தியாயம் الليل
21 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 9
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇரவின் மீது சத்தியமாக! (அது) மூடும்போது,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபகலின் மீது சத்தியமாக! (வெளிச்சத்துடன்) அது வெளிப்படும் போது,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சி பலதரப்பட்டதுதான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَٱتَّقَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, யார் தர்மம் புரிந்து, இன்னும் அல்லாஹ்வை அஞ்சினாரோ,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَصَدَّقَ بِٱلْحُسْنَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(இஸ்லாம் எனும்) மிக அழகிய (மார்க்கத்)தை உண்மைப்படுத்தினாரோ,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَسَنُيَسِّرُهُۥ لِلْيُسْرَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionசொர்க்கப் பாதையை அவருக்கு இலகுவாக்குவோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسْتَغْنَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, யார் கஞ்சத்தனம் செய்து (அல்லாஹ்வின் அருளை விட்டுத் தன்னை) தேவையற்றவனாகக் கருதினானோ,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَكَذَّبَ بِٱلْحُسْنَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் (இஸ்லாம் எனும்) மிக அழகிய (மார்க்கத்)தை பொய்ப்பித்தானோ,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَسَنُيَسِّرُهُۥ لِلْعُسْرَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனுக்கு நரகத்தின் பாதையை இலகுவாக்குவோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَمَا يُغْنِى عَنْهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் (நரகில்) விழும்போது, அவனுடைய செல்வம் அவனுக்குப் பலனளிக்காது.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நேர்வழி காட்டுவதுதான் நம்மீது (கடமை).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَإِنَّ لَنَا لَلْـَٔاخِرَةَ وَٱلْأُولَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக மறுமையும் இம்மையும் நமக்கே (உரியது)!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, கொழுந்துவிட்டெரிகின்ற நெருப்பை உங்களுக்கு அச்சமூட்டி எச்சரித்தேன்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
لَا يَصْلَىٰهَآ إِلَّا ٱلْأَشْقَى
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதில் பற்றி எரிய மாட்டான் பெரும் தீயவனைத் தவிர.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ٱلَّذِى كَذَّبَ وَتَوَلَّىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் (நம் மார்க்கத்தை) பொய்ப் பித்தான்; இன்னும் புறக்கணித்தான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَسَيُجَنَّبُهَا ٱلْأَتْقَى
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வை அதிகம் அஞ்சுகிறவர் தான் அதிலிருந்து தூரமாக்கப் படுவார்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ٱلَّذِى يُؤْتِى مَالَهُۥ يَتَزَكَّىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர்) மனத்தூய்மையை நாடியவராக தன் செல்வத்தைத் (தர்மம்) கொடுக்கிறார்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعْمَةٍ تُجْزَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒருவரின் கூலி கொடுக்கப்படும்படியான உபகாரம் ஏதும் அவரிடம் இல்லை.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِ ٱلْأَعْلَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமிக உயர்ந்தவனான தன் இறைவனின் முகத்தைத் தேடுவதைத் தவிர (வேறு நோக்கம் அவருக்கில்லை).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَلَسَوْفَ يَرْضَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அல்லாஹ்வின் வெகுமதியால்) திட்டமாக (அவர்) திருப்தியடைவார்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
→