Ad-Dhuhaa அத்தியாயம் الضحى
11 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 11
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلضُّحَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(முற்)பகலின் மீது சத்தியமாக!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇரவின் மீது சத்தியமாக! அது நிசப்தமாகும்போது,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) உம் இறைவன் உம்மை விட்டு (விலகி) விடவில்லை; இன்னும் (உம்மை) வெறுக்கவில்லை.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَلَلْـَٔاخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇம்மையைவிட மறுமைதான் உமக்கு மிகச் சிறந்தது.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டமாக, உம் இறைவன் (தன் அருளை) உமக்குக் கொடுப்பான். ஆகவே, நீர் திருப்தியடைவீர்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَـَٔاوَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉம்மை அநாதையாக அவன் காணவில்லையா? ஆகவே, (உம்மை) அவன் ஆதரித்தான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَوَجَدَكَ ضَآلًّا فَهَدَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉம்மை வழி அறியாதவராகக் கண்டான். ஆகவே, அவன் (உம்மை) நேர்வழி செலுத்தினான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَوَجَدَكَ عَآئِلًا فَأَغْنَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் உம்மை வறியவராகக் கண்டான். ஆகவே, (அவன் உம்மை) செல்வந்தராக்கினான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, அநாதைக்கு அநீதி செய்யாதீர்!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, யாசகரைக் கடிந்து கொள்ளாதீர்!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, உம் இறைவனின் அருளை (பிறமக்களுக்கு) அறிவிப்பீராக!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
→