caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Adh-Dhaariyat அத்தியாயம் الذاريات

60 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 67

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلذَّٰرِيَٰتِ ذَرْوًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவேகமாக வீசக்கூடிய காற்றுகள் மீது சத்தியமாக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَٱلْحَٰمِلَٰتِ وِقْرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(பெரும்) சுமையை சுமக்கின்ற மேகங்கள் மீது சத்தியமாக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَٱلْجَٰرِيَٰتِ يُسْرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமென்மையாக செல்கின்ற கப்பல்கள் மீது சத்தியமாக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَٱلْمُقَسِّمَٰتِ أَمْرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அல்லாஹ்வின்) கட்டளைகளை (அவனது படைப்புகளில்) பிரிப்பவர்கள் மீது சத்தியமாக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் வாக்களிக்கப்படுவதெல்லாம் உண்மைதான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِنَّ ٱلدِّينَ لَوَٰقِعٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக (விசாரணையும்) கூலி கொடுக்கப்படுவது(ம்) நிகழ்ந்தே தீரும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْحُبُكِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅழகிய படைப்புடைய வானத்தின் மீது சத்தியமாக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّكُمْ لَفِى قَوْلٍ مُّخْتَلِفٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நீங்கள் (இந்த குர்ஆன் விஷயத்தில் ஒருவருக்கொருவர்) மாறுபட்ட பேச்சில் (-மாறுபட்ட கருத்தைக் கூறுவதில்) இருக்கின்றனர்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يُؤْفَكُ عَنْهُ مَنْ أُفِكَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிருப்பப்படுபவர் இதை விட்டும் திருப்பப் படுகிறார்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

قُتِلَ ٱلْخَرَّٰصُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபொய்யை கற்பனை செய்பவர்கள் அழிந்து போகட்டும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ٱلَّذِينَ هُمْ فِى غَمْرَةٍ سَاهُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் (உலக) மயக்கத்தில் மறதியாளர் களாக இருக்கின்றனர்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَسْـَٔلُونَ أَيَّانَ يَوْمُ ٱلدِّينِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionகூலி கொடுக்கப்படும் நாள் எப்போது வரும் என்று அவர்கள் கேட்கின்றனர்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَوْمَ هُمْ عَلَى ٱلنَّارِ يُفْتَنُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் நெருப்பின் மீது கிடத்தப்பட்டு வேதனை செய்யப்படுகின்ற நாளில்...

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ذُوقُوا۟ فِتْنَتَكُمْ هَٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تَسْتَعْجِلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்கள் வேதனையை சுவையுங்கள்! இது(தான்) நீங்கள் அவசரமாகத் தேடிக் கொண்டிருந்ததாகும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّٰتٍ وَعُيُونٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக இறையச்சமுள்ளவர்கள் சொர்க்கங்களில், (அவற்றில் உள்ள) நீரூற்றுகளில் இருப்பார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ءَاخِذِينَ مَآ ءَاتَىٰهُمْ رَبُّهُمْ إِنَّهُمْ كَانُوا۟ قَبْلَ ذَٰلِكَ مُحْسِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுக்கு அவர்களின் இறைவன் கொடுத்ததை அவர்கள் (மகிழ்ச்சியுடன்) பெற்றுக்கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நல்லவர்களாக இருந்தார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كَانُوا۟ قَلِيلًا مِّنَ ٱلَّيْلِ مَا يَهْجَعُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் இரவில் மிகக் குறைவாக தூங்குபவர்களாக இருந்தார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَبِٱلْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(இரவில் நீண்ட நேரம் தொழுது விட்டு) அதிகாலையில் அவர்கள் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَفِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّ لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionயாசிப்பவருக்கும் இல்லாதவருக்கும் அவர்களது செல்வங்களில் உரிமை உண்டு.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَفِى ٱلْأَرْضِ ءَايَٰتٌ لِّلْمُوقِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉறுதியாக நம்பிக்கை கொள்பவர்களுக்கு பூமியில் பல அத்தாட்சிகள் உள்ளன.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَفِىٓ أَنفُسِكُمْ أَفَلَا تُبْصِرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் உங்களிலும் (பல அத்தாட்சிகள் உள்ளன). நீங்கள் உற்று நோக்க மாட்டீர்களா?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَفِى ٱلسَّمَآءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்கள் உணவும் நீங்கள் வாக்களிக்கப்படுவதும் வானத்தில் இருக்கிறது. (-அல்லாஹ்விடம் இருக்கிறது.)

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَوَرَبِّ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ إِنَّهُۥ لَحَقٌّ مِّثْلَ مَآ أَنَّكُمْ تَنطِقُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானம், பூமியுடைய அதிபதியின் மீது சத்தியமாக! நிச்சயமாக இது நீங்கள் பேசுவது போன்றே உண்மைதான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

هَلْ أَتَىٰكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَٰهِيمَ ٱلْمُكْرَمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇப்ராஹீமுடைய கண்ணியமான விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِذْ دَخَلُوا۟ عَلَيْهِ فَقَالُوا۟ سَلَٰمًا قَالَ سَلَٰمٌ قَوْمٌ مُّنكَرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் அவரிடம் (வீட்டில்) நுழைந்தபோது “ஸலாம்” கூறினர். (பதிலுக்கு) அவரும், “ஸலாம்” (கூறி, நீங்கள் நான்) அறியாத மக்கள் (என்று) கூறினார்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَرَاغَ إِلَىٰٓ أَهْلِهِۦ فَجَآءَ بِعِجْلٍ سَمِينٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதனது குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்று கொழுத்த காளைக் கன்றை (அறுத்து நெருப்பில் சுட்டு) கொண்டு வந்தார்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَقَرَّبَهُۥٓ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதை அவர்கள் பக்கம் நெருக்கமாக்கி, நீங்கள் சாப்பிட மாட்டீர்களா? என்று கூறினார்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً قَالُوا۟ لَا تَخَفْ وَبَشَّرُوهُ بِغُلَٰمٍ عَلِيمٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(ஆனால், அவர்கள் சாப்பிடவில்லை.) ஆகவே, அவர்களினால் அவர் பயத்தை உணர்ந்தார். அவர்கள் கூறினார்கள்: “பயப்படாதீர்! இன்னும், கல்வியாளரான ஓர் ஆண் குழந்தையைக் கொண்டு அவருக்கு நற்செய்தி கூறினார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَأَقْبَلَتِ ٱمْرَأَتُهُۥ فِى صَرَّةٍ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوزٌ عَقِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(இதை செவிமடுத்த) அவருடைய மனைவி சப்தத்தோடு முன்னோக்கி வந்து தனது முகத்தை அறைந்தார். இன்னும், (நான் ஒரு) மலடியான கிழவி ஆயிற்றே என்று கூறினாள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

قَالُوا۟ كَذَٰلِكِ قَالَ رَبُّكِ إِنَّهُۥ هُوَ ٱلْحَكِيمُ ٱلْعَلِيمُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்வாறுதான் உமது இறைவன் கூறினான் நிச்சயமாக அவன்தான் மகா ஞானவான், நன்கறிந்தவன் என்று அவர்கள் கூறினார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا ٱلْمُرْسَلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதூதர்களே! உங்கள் காரியம்தான் என்ன? என்று அவர் கூறினார்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

قَالُوٓا۟ إِنَّآ أُرْسِلْنَآ إِلَىٰ قَوْمٍ مُّجْرِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாங்கள் குற்றவாளிகளான மக்கள் பக்கம் அனுப்பப்பட்டுள்ளோம் என்று கூறினார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَةً مِّن طِينٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionகளிமண்ணினால் ஆன கல்லை அவர்கள் மீது எறிவதற்காக (நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்).

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ لِلْمُسْرِفِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(எல்லை மீறிய) பாவிகளுக்காக உமது இறைவனிடம் (அந்த கல்) அடையாள மிடப்பட்டதாகும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَأَخْرَجْنَا مَن كَانَ فِيهَا مِنَ ٱلْمُؤْمِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, அதில் நம்பிக்கையாளர்களாக இருந்தவர்களை நாம் (அந்த ஊரில் இருந்து) வெளியேற்றி விட்டோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَمَا وَجَدْنَا فِيهَا غَيْرَ بَيْتٍ مِّنَ ٱلْمُسْلِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆனால், அதில் (அந்த ஊரில்) முஸ்லிம்களுடைய ஒரு வீட்டைத் தவிர (வேறு முஸ்லிம் வீடுகளை) நாம் (அங்கு) காணவில்லை.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَتَرَكْنَا فِيهَآ ءَايَةً لِّلَّذِينَ يَخَافُونَ ٱلْعَذَابَ ٱلْأَلِيمَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவலி தரக்கூடிய தண்டனையைப் பயப்படுகின்றவர்களுக்கு அதில் ஓர் அத்தாட்சியை நாம் விட்டுள்ளோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَفِى مُوسَىٰٓ إِذْ أَرْسَلْنَٰهُ إِلَىٰ فِرْعَوْنَ بِسُلْطَٰنٍ مُّبِينٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் மூஸாவி(ன் சரித்திரத்தி)லும், நாம் அவரை ஃபிர்அவ்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு அனுப்பிய போது (பல அத்தாட்சிகள் இருக்கின்றன).

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَتَوَلَّىٰ بِرُكْنِهِۦ وَقَالَ سَٰحِرٌ أَوْ مَجْنُونٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதனது பலத்தினால் (பெருமை கொண்டவனாக நமது அத்தாட்சிகளை ஏற்காமல்) விலகினான். (மூஸா) ஒரு சூனியக்காரர்தான் அல்லது ஒரு பைத்தியக்காரர்தான் (இறைவனின் தூதர் அல்ல) என்று கூறினான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَأَخَذْنَٰهُ وَجُنُودَهُۥ فَنَبَذْنَٰهُمْ فِى ٱلْيَمِّ وَهُوَ مُلِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனையும் அவனுடைய இராணுவங்களையும் நாம் பிடித்தோம். அவர்களை கடலில் எறிந்தோம். அவனோ பழிப்புக்குள்ளானவன் ஆவான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَفِى عَادٍ إِذْ أَرْسَلْنَا عَلَيْهِمُ ٱلرِّيحَ ٱلْعَقِيمَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆதி(ன் சரித்திரத்தி)லும் அவர்கள் மீது நாம் மலட்டுக் காற்றை (-எவ்வித நன்மையுமில்லாத, அழிவை ஏற்படுத்தும் காற்றை) அனுப்பியபோது (பல அத்தாட்சிகள் இருக்கின்றன).

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

مَا تَذَرُ مِن شَىْءٍ أَتَتْ عَلَيْهِ إِلَّا جَعَلَتْهُ كَٱلرَّمِيمِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது எதன் மீது (கடந்து) செல்கிறதோ அதை பழைய மக்கிப்போன பொருளைப் போன்று ஆக்காமல் விடாது.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَفِى ثَمُودَ إِذْ قِيلَ لَهُمْ تَمَتَّعُوا۟ حَتَّىٰ حِينٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஸமூதி(ன் சரித்திரத்தி)லும், சிறிது காலம் வரை சுகமாக இருங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்பட்ட போது (பல அத்தாட்சிகள் இருக்கின்றன).

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَعَتَوْا۟ عَنْ أَمْرِ رَبِّهِمْ فَأَخَذَتْهُمُ ٱلصَّٰعِقَةُ وَهُمْ يَنظُرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் தங்கள் இறைவனின் கட்டளையை ஏற்காமல் பெருமை அடித்தனர். அவர்களை இடிமுழக்கம் பிடித்தது. அவர்களோ (அந்த வேதனையை) எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَمَا ٱسْتَطَٰعُوا۟ مِن قِيَامٍ وَمَا كَانُوا۟ مُنتَصِرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அல்லாஹ்வின் தண்டனைக்கு முன் எதிர்த்து) நிற்பதற்கு அவர்கள் இயலாமல் ஆகிவிட்டார்கள். அவர்கள் (நம்மிடம்) பழிதீர்ப்பவர்களாகவும் இருக்கவில்லை. (அவர்களால் நமது தண்டனையை எதிர்கொள்ளவும் முடியாது. நாம் அவர்களை தண்டித்தால் நம்மிடம் அவர்கள் பழிவாங்கவும் முடியாது.)

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ إِنَّهُمْ كَانُوا۟ قَوْمًا فَٰسِقِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் நூஹுடைய மக்களையும் இதற்கு முன்னர் (நாம் அழித்தோம்). நிச்சயமாக அவர்கள் பாவிகளான மக்களாக இருந்தனர்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلسَّمَآءَ بَنَيْنَٰهَا بِأَيْي۟دٍ وَإِنَّا لَمُوسِعُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானத்தை -அதை (நமது) பலத்தால் (முகடாக) நாம் உயர்த்தினோம். நிச்சயமாக நாம் (அவ்வாறு செய்வதற்கு) மிகவும் வசதி (ஆற்றல்) படைத்தவர்கள் ஆவோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلْأَرْضَ فَرَشْنَٰهَا فَنِعْمَ ٱلْمَٰهِدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபூமியை நாம் விரித்தோம். விரிப்பவர்களில் நாம் மிகச் சிறந்தவர்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَمِن كُلِّ شَىْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒவ்வொன்றிலும் இரண்டு ஜோடிகளை படைத்தோம், நீங்கள் (அல்லாஹ்வின் படைப்புகளை சிந்தித்து) நல்லுணர்வு பெறுவதற்காக.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَفِرُّوٓا۟ إِلَى ٱللَّهِ إِنِّى لَكُم مِّنْهُ نَذِيرٌ مُّبِينٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, நீங்கள் அல்லாஹ்வின் பக்கம் விரண்டு ஓடுங்கள்! நிச்சயமாக நான் அவனிடமிருந்து உங்களுக்கு தெளிவான எச்சரிப்பாளர் ஆவேன்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَلَا تَجْعَلُوا۟ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ إِنِّى لَكُم مِّنْهُ نَذِيرٌ مُّبِينٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை ஏற்படுத்தாதீர்கள். நிச்சயமாக நான் அவனிடமிருந்து உங்களுக்கு தெளிவான எச்சரிப்பாளர் ஆவேன்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كَذَٰلِكَ مَآ أَتَى ٱلَّذِينَ مِن قَبْلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُوا۟ سَاحِرٌ أَوْ مَجْنُونٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவ்வாறுதான், (தங்களது தூதரைப் பார்த்து இவர்) ஒரு சூனியக்காரர் அல்லது ஒரு பைத்தியக்காரர் (இறைவனின் தூதர் அல்ல) என்று கூறாமல் இவர்களுக்கு முன்னர் சென்றவர்களுக்கு எந்த ஒரு தூதரும் வந்ததில்லை.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَتَوَاصَوْا۟ بِهِۦ بَلْ هُمْ قَوْمٌ طَاغُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்கள் தங்களுக்குள் இதை (இந்த தூதரை பொய்ப்பிக்க வேண்டும் என்று) உபதேசித்துக் கொண்டார்களா? (-முன் சென்ற நிராகரிப்பாளர்கள் இக்கால நிராகரிப்பாளர்களுக்கு ஏதும் உபதேசத்தை சொல்லிச் சென்றுள்ளார்களா, நாங்கள் நிராகரித்ததைப் போன்று நீங்களும் உங்கள் நபியை பொய்ப்பிக்க வேண்டும் என்று) மாறாக, இவர்கள் வரம்பு மீறிய மக்கள் ஆவார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَتَوَلَّ عَنْهُمْ فَمَآ أَنتَ بِمَلُومٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, (நபியே!) நீர் அவர்களை விட்டு விலகுவீராக! நீர் பழிக்கப்பட்டவர் இல்லை.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَذَكِّرْ فَإِنَّ ٱلذِّكْرَىٰ تَنفَعُ ٱلْمُؤْمِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக! நிச்சயமாக நல்லுபதேசம் நம்பிக்கையாளர்களுக்கு பலனளிக்கும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَمَا خَلَقْتُ ٱلْجِنَّ وَٱلْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஜின்களையும் மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்கே தவிர (வேறு எதற்கும்) நான் படைக்கவில்லை.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

مَآ أُرِيدُ مِنْهُم مِّن رِّزْقٍ وَمَآ أُرِيدُ أَن يُطْعِمُونِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநான் அவர்களிடம் எவ்வித உணவையும் நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلْقُوَّةِ ٱلْمَتِينُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அல்லாஹ்தான் எல்லோருக்கும் உணவளிப்பவன், பலமுள்ளவன், மிக உறுதியுடையவன்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا۟ ذَنُوبًا مِّثْلَ ذَنُوبِ أَصْحَٰبِهِمْ فَلَا يَسْتَعْجِلُونِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அநியாயம் செய்தவர்களுக்கு (அல்லாஹ்வின் தண்டனையில்) பெரிய பங்குண்டு, அவர்களின் கூட்டாளிகளுடைய பெரிய பங்கைப் போல. ஆகவே, அவர்கள் (இறை தண்டனையை) அவசரமாகத் தேடவேண்டாம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَوَيْلٌ لِّلَّذِينَ كَفَرُوا۟ مِن يَوْمِهِمُ ٱلَّذِى يُوعَدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, நிராகரித்தவர்களுக்கு அவர்கள் வாக்களிக்கப்பட்ட அவர்களின் (தண்டனை) நாளில் (அல்லாஹ்வின் தண்டனை இறங்கும் நாளில்) நாசம் உண்டாகட்டும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70