caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Adh-Dhaariyat அத்தியாயம், வசனம் 25

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 67 · 51:25

إِذْ دَخَلُوا۟ عَلَيْهِ فَقَالُوا۟ سَلَٰمًا قَالَ سَلَٰمٌ قَوْمٌ مُّنكَرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் அவரிடம் (வீட்டில்) நுழைந்தபோது “ஸலாம்” கூறினர். (பதிலுக்கு) அவரும், “ஸலாம்” (கூறி, நீங்கள் நான்) அறியாத மக்கள் (என்று) கூறினார்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் அவரிடம் (வீட்டில்) நுழைந்தபோது, “ஸலாம்” கூறினார்கள். (பதிலுக்கு) அவரும், “ஸலாம்!” (என்று கூறி, சற்று தாமதித்துவிட்டு நீங்கள் என்னிடம்) “அறியப்படாத மக்கள்” என்று கூறினார்.
Tamil Translation - Abdulhamid Baqawi25. அவர்கள் அவரிடம் வந்தபோது (அவரை நோக்கி “உமக்கு) ஸலாம் (ஈடேற்றம்) உண்டாவதாக!'' என்று கூறினார்கள். அதற்கு (இப்ராஹீம், “உங்களுக்கும்) ஸலாம் (ஈடேற்றம்) உண்டாவதாக!'' என்று கூறி, (இவர்கள் நாம்) அறியாத மக்களாக இருக்கின்றனரே! (என்று தன் மனத்தில் எண்ணினார்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70