كَذَٰلِكَ مَآ أَتَى ٱلَّذِينَ مِن قَبْلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُوا۟ سَاحِرٌ أَوْ مَجْنُونٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவ்வாறுதான், (தங்களது தூதரைப் பார்த்து இவர்) ஒரு சூனியக்காரர் அல்லது ஒரு பைத்தியக்காரர் (இறைவனின் தூதர் அல்ல) என்று கூறாமல் இவர்களுக்கு முன்னர் சென்றவர்களுக்கு எந்த ஒரு தூதரும் வந்ததில்லை.
Tamil Translation - Omar Sharifஇவ்வாறுதான், இவர்களுக்கு முன்னர் சென்றவர்களுக்கு எந்த ஒரு தூதரும் வரவில்லை, அவர்கள் (தங்களது தூதரைப் பார்த்து இவர்) ஒரு சூனியக்காரர்; அல்லது, ஒரு பைத்தியக்காரர் என்று கூறியே தவிர.
Tamil Translation - Abdulhamid Baqawi52. இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், அவர்களிடம் எந்தத் தூதர் வந்தபோதிலும், அவரை சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமலிருக்கவில்லை.