أَتَوَاصَوْا۟ بِهِۦ بَلْ هُمْ قَوْمٌ طَاغُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்கள் தங்களுக்குள் இதை (இந்த தூதரை பொய்ப்பிக்க வேண்டும் என்று) உபதேசித்துக் கொண்டார்களா? (-முன் சென்ற நிராகரிப்பாளர்கள் இக்கால நிராகரிப்பாளர்களுக்கு ஏதும் உபதேசத்தை சொல்லிச் சென்றுள்ளார்களா, நாங்கள் நிராகரித்ததைப் போன்று நீங்களும் உங்கள் நபியை பொய்ப்பிக்க வேண்டும் என்று) மாறாக, இவர்கள் வரம்பு மீறிய மக்கள் ஆவார்கள்.
Tamil Translation - Omar Sharif(முற்கால நிராகரிப்பாளர்கள், இக்கால நிராகரிப்பாளர்கள்) இவர்கள் (எல்லோரும்) தங்களுக்குள் இ(றைத்தூதர்களை பொய்ப்பிக்க வேண்டும் என்ற விஷயத்)தை உபதேசித்துக் கொண்டார்களா? (-முன் சென்ற நிராகரிப்பாளர்கள் இக்கால நிராகரிப்பாளர்களுக்கு ஏதும் உபதேசத்தை சொல்லிச் சென்றுள்ளார்களா, நாங்கள் நிராகரித்ததைப் போன்று நீங்களும் உங்கள் நபியை பொய்ப்பிக்க வேண்டும் என்று.) மாறாக, இவர்கள் எல்லை மீறிய மக்கள் ஆவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi53. (இவ்வாறு கூறும்படியே) அவர்கள் தங்களுக்குள் (பரம்பரை பரம்பரையாக) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தனர் போலும்! இல்லை, அவர்கள் (இயற்கையிலேயே இவ்வாறு கூறக் கூடிய) அநியாயக்கார மக்களாக இருந்தனர்.