caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Alaq அத்தியாயம் العلق

19 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே! அகிலங்கள் அனைத்தையும்) படைத்த உம் இறைவனின் பெயரால் படிப்பீராக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

خَلَقَ ٱلْإِنسَٰنَ مِنْ عَلَقٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் மனிதனைக் கருவிலிருந்து படைத்தான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபடிப்பீராக! இன்னும் உம் இறைவன் பெரும் கண்ணியவான் ஆவான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் எழுதுகோல் மூலம் (எழுதுவதைக்) கற்பித்தான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

عَلَّمَ ٱلْإِنسَٰنَ مَا لَمْ يَعْلَمْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமனிதனுக்கு அவன் அறியாததைக் கற்பித்தான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كَلَّآ إِنَّ ٱلْإِنسَٰنَ لَيَطْغَىٰٓ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்வாறல்ல! நிச்சயமாக மனிதன் (நிராகரிப்பிலும் பாவத்திலும்) எல்லை மீறுகிறான்,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(காரணம், இறையருளை விட்டுத்) தன்னைத் தேவையற்றவனாக எண்ணியதால்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக மீட்சி உம் இறைவனின் பக்கம்தான் இருக்கிறது.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) தடுப்பவனை நீர் பார்த்தீரா?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

عَبْدًا إِذَا صَلَّىٰٓ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஓர் அடியாரை அவர் தொழும்போது அவன் தடுக்கிறான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீர் பார்த்தீரா! அவர் நேர்வழியில் இருந்தாலுமா (அவன் அவரைத் தடுப்பான்)?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லது, அவர் நன்மையை ஏவினாலுமா (அவன் அவரைத் தடுப்பான்)?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَرَءَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபார்த்தீரா? அவன் பொய்ப்பித்தால், இன்னும் புறக்கணித்தால்,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًۢا بِٱلنَّاصِيَةِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்வாறல்ல! (அவன் தனது தீய செயல்களிலிருந்து) விலகவில்லையெனில் நெற்றி முடியைக் கடுமையாகப் பிடிப்போம். (பின்னர், அவனை நரகத்தில் வீசி எறிவோம்).

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

نَاصِيَةٍ كَٰذِبَةٍ خَاطِئَةٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபொய் கூறுகின்ற, குற்றம் புரிகின்ற (அவனுடைய) நெற்றி முடியை (பிடித்து நரகத்தில் எறிவோம்).

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَلْيَدْعُ نَادِيَهُۥ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

سَنَدْعُ ٱلزَّبَانِيَةَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநரகத்தின் காவலாளிகளை நாம் அழைப்போம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்வாறல்ல, அவனுக்குக் கீழ்ப்படியாதீர்! (உம் இறைவனுக்குச்) சிரம் பணிவீராக! (அவனளவில்) நெருங்குவீராக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70