caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ad-Dukhaan அத்தியாயம் الدخان

59 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 64

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ حمٓ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஹா, மீம்.[1]

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلْكِتَٰبِ ٱلْمُبِينِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّآ أَنزَلْنَٰهُ فِى لَيْلَةٍ مُّبَٰرَكَةٍ إِنَّا كُنَّا مُنذِرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாம் அருள்நிறைந்த ஓர் இரவில் இதை இறக்கினோம். நிச்சயமாக நாம் அச்சமூட்டி எச்சரிப்பவர்களாக இருந்தோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇதில்தான் ஞானமிக்க எல்லாக் காரியங்களும் முடிவு செய்யப்படுகின்றன,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَمْرًا مِّنْ عِندِنَآ إِنَّا كُنَّا مُرْسِلِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்மிடமிருந்து வருகின்ற கட்டளையின்படி. நிச்சயமாக நாம் (அவரை) தூதராக அனுப்பக் கூடியவர்களாகவே இருந்தோம்,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

رَحْمَةً مِّن رَّبِّكَ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர்) உமது இறைவனின் ஓர் அருளாக இருக்கவேண்டும் என்பதற்காக. நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَآ إِن كُنتُم مُّوقِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின் அதிபதி(யிடமிருந்து அவர் அருளாக அனுப்பப்பட்டு இருக்கிறார்). நீங்கள் (உண்மைகளை) உறுதியாக நம்பக் கூடியவர்களாக இருந்தால் (இதை உறுதியாக நம்பிக்கை கொள்ளுங்கள்)!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

لَآ إِلَٰهَ إِلَّا هُوَ يُحْىِۦ وَيُمِيتُ رَبُّكُمْ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர (வேறு யாரும்) அறவே இல்லை. அவன்தான் உயிர்ப்பிக்கின்றான்; மரணிக்க வைக்கின்றான். அவன்தான் உங்கள் இறைவனும் உங்கள் முன்னோர்களான மூதாதைகளின் இறைவனும் ஆவான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

بَلْ هُمْ فِى شَكٍّ يَلْعَبُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமாறாக, அவர்கள் (இந்த வேதத்தை நம்பாமல்) சந்தேகத்தில் இருக்கின்றனர்; விளையாடுகின்றனர்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَٱرْتَقِبْ يَوْمَ تَأْتِى ٱلسَّمَآءُ بِدُخَانٍ مُّبِينٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வருகின்ற நாளை எதிர்பார்ப்பீராக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَغْشَى ٱلنَّاسَ هَٰذَا عَذَابٌ أَلِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது மக்களை சூழ்ந்துகொள்ளும். இது துன்புறுத்தும் தண்டனையாகும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

رَّبَّنَا ٱكْشِفْ عَنَّا ٱلْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎங்கள் இறைவா! எங்களை விட்டு வேதனையை அகற்றி விடுவாயாக! நிச்சயமாக நாங்கள் நம்பிக்கையாளர்கள் ஆவோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَنَّىٰ لَهُمُ ٱلذِّكْرَىٰ وَقَدْ جَآءَهُمْ رَسُولٌ مُّبِينٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(வேதனை வந்த பின்னர்) நல்லறிவு பெறுவது அவர்களுக்கு எப்படி (பலன் தரும்)? திட்டமாக அவர்களிடம் தெளிவான ஒரு தூதர் வந்தார்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ثُمَّ تَوَلَّوْا۟ عَنْهُ وَقَالُوا۟ مُعَلَّمٌ مَّجْنُونٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, அவர்கள் அவரை விட்டு விலகிவிட்டனர். இன்னும், அவர் (பிறரால் இந்த வேதத்தை) கற்பிக்கப்பட்டவர், பைத்தியக்காரர் என்று கூறினர்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّا كَاشِفُوا۟ ٱلْعَذَابِ قَلِيلًا إِنَّكُمْ عَآئِدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாம் இந்த வேதனையை கொஞ்சம் நீக்குவோம். (ஆனால்,) நிச்சயமாக நீங்கள் (உங்கள் வழிகேட்டுக்குத்தான்) திரும்புவீர்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَوْمَ نَبْطِشُ ٱلْبَطْشَةَ ٱلْكُبْرَىٰٓ إِنَّا مُنتَقِمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபெரிய தாக்குதலாக (அவர்களை) நாம் தாக்குகின்ற நாளில் (அவர்களிடம்) நிச்சயமாக நாம் பழி வாங்குவோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَجَآءَهُمْ رَسُولٌ كَرِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்களுக்கு முன்னர் நாம் ஃபிர்அவ்னுடைய மக்களை திட்டவட்டமாக சோதித்தோம். அவர்களிடம் கண்ணியமான ஒரு தூதர் வந்தார்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَنْ أَدُّوٓا۟ إِلَىَّ عِبَادَ ٱللَّهِ إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர் கூறினார்:) அல்லாஹ்வின் அடியார்களை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்! நிச்சயமாக நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) நம்பிக்கைக்குரிய தூதர் ஆவேன்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَأَن لَّا تَعْلُوا۟ عَلَى ٱللَّهِ إِنِّىٓ ءَاتِيكُم بِسُلْطَٰنٍ مُّبِينٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்விற்கு முன் அழிச்சாட்டியம் செய்யாதீர்கள். நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வருவேன்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِنِّى عُذْتُ بِرَبِّى وَرَبِّكُمْ أَن تَرْجُمُونِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“இன்னும், நிச்சயமாக நான் எனது இறைவனிடம்; இன்னும், உங்கள் இறைவனிடம் நீங்கள் என்னைக் கொல்வதில் இருந்து பாதுகாவல் தேடினேன்.”

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِن لَّمْ تُؤْمِنُوا۟ لِى فَٱعْتَزِلُونِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“நீங்கள் என்னை நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் என்னை விட்டு விலகி சென்று விடுங்கள்.”

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَدَعَا رَبَّهُۥٓ أَنَّ هَٰٓؤُلَآءِ قَوْمٌ مُّجْرِمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, அவர் தனது இறைவனை அழைத்தார்: “நிச்சயமாக இவர்கள் (உனக்கு எதிராக) குற்றம் செய்கின்ற மக்கள் ஆவார்கள்.”

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَأَسْرِ بِعِبَادِى لَيْلًا إِنَّكُم مُّتَّبَعُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(இறைவன் கூறினான்:) “ஆக, என் அடியார்களை இரவில் நீர் அழைத்துச் செல்வீராக. நிச்சயமாக நீங்கள் (உங்கள் எதிரிகளால்) பின்தொடரப்படுவீர்கள்.”

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱتْرُكِ ٱلْبَحْرَ رَهْوًا إِنَّهُمْ جُندٌ مُّغْرَقُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், கடலை (அது) அமைதியாக (இருக்கின்ற நிலையில் அப்படியே) விட்டுவிடுங்கள்! நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுகின்ற ராணுவம் ஆவார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كَمْ تَرَكُوا۟ مِن جَنَّٰتٍ وَعُيُونٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் எத்தனையோ தோட்டங்களையும் ஊற்றுகளையும் விட்டுச்சென்றார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَزُرُوعٍ وَمَقَامٍ كَرِيمٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், விவசாய நிலங்களையும் கண்ணியமான இடங்களையும் (-மாட மாளிகைகளையும்) விட்டுச்சென்றார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَنَعْمَةٍ كَانُوا۟ فِيهَا فَٰكِهِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், அவர்கள் சுகமாக அனுபவித்துக் கொண்டிருந்த வசதிகளையும் விட்டுச்சென்றார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كَذَٰلِكَ وَأَوْرَثْنَٰهَا قَوْمًا ءَاخَرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇப்படித்தான் (உமது இறைவனின் தண்டனை வந்தால் பாவிகளின் நிலை இருக்கும்). இவற்றை (எல்லாம்) வேறு மக்களுக்கு நாம் சொந்தமாக்கினோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَمَا بَكَتْ عَلَيْهِمُ ٱلسَّمَآءُ وَٱلْأَرْضُ وَمَا كَانُوا۟ مُنظَرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் மீது வானமும் பூமியும் அழவில்லை. அவர்கள் தவணைத் தரப்படுபவர்களாகவும் இருக்கவில்லை.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَلَقَدْ نَجَّيْنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ مِنَ ٱلْعَذَابِ ٱلْمُهِينِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇழிவுபடுத்தும் தண்டனையிலிருந்து இஸ்ரவேலர்களை திட்டவட்டமாக நாம் காப்பாற்றினோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

مِن فِرْعَوْنَ إِنَّهُۥ كَانَ عَالِيًا مِّنَ ٱلْمُسْرِفِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஃபிர்அவ்னிடமிருந்து (அவர்களை பாதுகாத்தோம்). நிச்சயமாக அவன் பெருமை அடிப்பவனாக (-அழிச்சாட்டியம் செய்பவனாக), வரம்புமீறிகளில் ஒருவனாக இருந்தான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَلَقَدِ ٱخْتَرْنَٰهُمْ عَلَىٰ عِلْمٍ عَلَى ٱلْعَٰلَمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(-இஸ்ரவேலர்களை அவர்களின் தகுதியை) அறிந்தே அகிலத்தாரை விட அவர்களை திட்டவட்டமாக நாம் தேர்ந்தெடுத்தோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَءَاتَيْنَٰهُم مِّنَ ٱلْـَٔايَٰتِ مَا فِيهِ بَلَٰٓؤٌا۟ مُّبِينٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅத்தாட்சிகளில் தெளிவான சோதனை உள்ளதை அவர்களுக்கு நாம் கொடுத்தோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّ هَٰٓؤُلَآءِ لَيَقُولُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) நிச்சயமாக (உமது மக்களாகிய) இவர்கள் கூறுகிறார்கள்:

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنْ هِىَ إِلَّا مَوْتَتُنَا ٱلْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُنشَرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“இது நமது முதல் மரணமாகவே தவிர இல்லை. இன்னும், நாங்கள் (மரணித்த பின்னர் மீண்டும் உயிர்கொடுத்து) எழுப்பப்படுபவர்களாக இல்லை.”

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَأْتُوا۟ بِـَٔابَآئِنَآ إِن كُنتُمْ صَٰدِقِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(முஹம்மதே!) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்கள் மூதாதைகளை (உயிர்ப்பித்து)க் கொண்டு வாருங்கள்!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمُ تُبَّعٍ وَٱلَّذِينَ مِن قَبْلِهِمْ أَهْلَكْنَٰهُمْ إِنَّهُمْ كَانُوا۟ مُجْرِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்கள் சிறந்தவர்களா அல்லது துப்பஃ உடைய மக்களா? இன்னும் இவர்களுக்கு முன்னுள்ளவர்களா? அவர்களை (எல்லாம்) நாம் அழித்துவிட்டோம். நிச்சயமாக அவர்கள் குற்றவாளிகளாக இருந்தனர்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَمَا خَلَقْنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَٰعِبِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானங்களையும் பூமியையும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும் நாம் விளையாட்டாக படைக்கவில்லை.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

مَا خَلَقْنَٰهُمَآ إِلَّا بِٱلْحَقِّ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம் அவ்விரண்டையும் உண்மையான காரணத்திற்கே தவிர படைக்கவில்லை. என்றாலும் அவர்களில் அதிகமானவர்கள் (இதை) அறியமாட்டார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ مِيقَٰتُهُمْ أَجْمَعِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக தீர்ப்பு நாள் இவர்கள் அனைவரின் (தண்டனைக்காக) நேரம் குறிக்கப்பட்ட நாளாகும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَوْمَ لَا يُغْنِى مَوْلًى عَن مَّوْلًى شَيْـًٔا وَلَا هُمْ يُنصَرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅந்நாளில் நண்பன் (உறவுக்காரன்) நண்பனை (உறவுக்காரனை) விட்டு (வேதனையில்) எதையும் தடுக்க மாட்டான். அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِلَّا مَن رَّحِمَ ٱللَّهُ إِنَّهُۥ هُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் எவர்கள் மீது கருணை புரிந்தானோ அவர்களைத் தவிர (யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது). நிச்சயமாக அவன்தான் மிகைத்தவன், மகா கருணையாளன்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّ شَجَرَتَ ٱلزَّقُّومِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக ஸக்கூம் மரம்

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

طَعَامُ ٱلْأَثِيمِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபாவிகளின் உணவாகும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كَٱلْمُهْلِ يَغْلِى فِى ٱلْبُطُونِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉருக்கப்பட்ட செம்பைப் போல், வயிறுகளில் அது கொதித்துக் கொண்டிருக்கும்,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كَغَلْىِ ٱلْحَمِيمِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionகடுமையாக கொதிக்கின்ற தண்ணீர் கொதிப்பதைப் போல்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

خُذُوهُ فَٱعْتِلُوهُ إِلَىٰ سَوَآءِ ٱلْجَحِيمِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனைப் பிடியுங்கள்! ஆக, நரகத்தின் நடுவில் அவனை இழுத்து வாருங்கள்!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ثُمَّ صُبُّوا۟ فَوْقَ رَأْسِهِۦ مِنْ عَذَابِ ٱلْحَمِيمِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, (அவனை) வேதனை செய்வதற்காக அவனது தலைக்கு மேல் கடுமையாக கொதிக்கின்ற நீரிலிருந்து ஊற்றுங்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ذُقْ إِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْكَرِيمُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீ (இந்த தண்டனைகளை) சுவை! நிச்சயமாக நீதான் கண்ணியமானவன் மதிப்பிற்குரியவன்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّ هَٰذَا مَا كُنتُم بِهِۦ تَمْتَرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக, நீங்கள் சந்தேகிப்பவர்களாக இருந்தது இதுதான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّ ٱلْمُتَّقِينَ فِى مَقَامٍ أَمِينٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக இறையச்சமுள்ளவர்கள் பாதுகாப்பான இடத்தில்,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فِى جَنَّٰتٍ وَعُيُونٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionசொர்க்கங்களில், ஊற்றுகளில் இருப்பார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَلْبَسُونَ مِن سُندُسٍ وَإِسْتَبْرَقٍ مُّتَقَٰبِلِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் மென்மையான, தடிப்பமான பட்டு ஆடைகளை அணிவார்கள். ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக இருப்பார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كَذَٰلِكَ وَزَوَّجْنَٰهُم بِحُورٍ عِينٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவ்வாறுதான் (அவர்கள் சொர்க்கத்தில் கண்ணியப்படுத்தப்படுவார்கள்). இன்னும், நாம் அவர்களுக்கு கண்ணழகிகளான வெண்மையான கன்னிகளை மணமுடித்து வைப்போம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَدْعُونَ فِيهَا بِكُلِّ فَٰكِهَةٍ ءَامِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதில் அவர்கள் நிம்மதியானவர்களாக (-பாதுகாப்புப் பெற்றவர்களாக) எல்லாப் பழங்களையும் (அவர்கள் உண்பதற்கு அவர்களின் பணியாளர்களிடம்) கேட்பார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

لَا يَذُوقُونَ فِيهَا ٱلْمَوْتَ إِلَّا ٱلْمَوْتَةَ ٱلْأُولَىٰ وَوَقَىٰهُمْ عَذَابَ ٱلْجَحِيمِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதில் மரணத்தை அவர்கள் சுவைக்க மாட்டார்கள், (உலகத்தில் அவர்கள் மரணித்த) முதல் மரணத்தைத் தவிர. (சொர்க்கத்தில் மரணம் இருக்காது.) இன்னும், நரகத்தின் தண்டனையை விட்டும் அவன் அவர்களைப் பாதுகாத்தான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَضْلًا مِّن رَّبِّكَ ذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉமது இறைவனின் அருளினால் (இவை எல்லாம் அவர்களுக்குக் கிடைக்கப் பெறும்). இதுதான் மகத்தான வெற்றியாகும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَإِنَّمَا يَسَّرْنَٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, உமது (அரபி) மொழியில் இ(ந்த வேதத்)தை (கற்பதையும் கற்பிப்பதையும்) நாம் இலகுவாக்கி வைத்ததெல்லாம் அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகத்தான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَٱرْتَقِبْ إِنَّهُم مُّرْتَقِبُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, நீர் எதிர்பார்த்திருப்பீராக! நிச்சயமாக அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70