caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Maa'un அத்தியாயம் الماعون

7 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 17

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே! மறுமையில்) கூலி கொடுக்கப்படுவதை பொய்ப்பிப் பவனைப் பார்த்தீரா?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அவன் அநாதையை விரட்டுகிறான். (அநாதைக்கு அநீதி இழைக்கிறான்.)

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஏழையின் உணவுக்கு (பிறரைத்) தூண்ட மாட்டான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, அந்த தொழுகையாளி களுக்குக் கேடுதான்,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் தங்கள் தொழுகையை (அதற்குரிய நேரத்தில் நிறை வேற்றுவதை) விட்டு மறந்தவர்களாக இருக்கிறார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் பிறர் பார்ப்பதற்காக (நல்லறங்களை) செய்கிறார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(பாத்திரம், ஊசி போன்ற) சிறிய பொருளை(யும் இரவல் கொடுக்காது) தடுக்கிறார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70