caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 235

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:235

وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا عَرَّضْتُم بِهِۦ مِنْ خِطْبَةِ ٱلنِّسَآءِ أَوْ أَكْنَنتُمْ فِىٓ أَنفُسِكُمْ عَلِمَ ٱللَّهُ أَنَّكُمْ سَتَذْكُرُونَهُنَّ وَلَٰكِن لَّا تُوَاعِدُوهُنَّ سِرًّا إِلَّآ أَن تَقُولُوا۟ قَوْلًا مَّعْرُوفًا وَلَا تَعْزِمُوا۟ عُقْدَةَ ٱلنِّكَاحِ حَتَّىٰ يَبْلُغَ ٱلْكِتَٰبُ أَجَلَهُۥ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا فِىٓ أَنفُسِكُمْ فَٱحْذَرُوهُ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ غَفُورٌ حَلِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅப்பெண்களை திருமணம் பேசுவதற்காக நீங்கள் சூசகமாக எடுத்துக் கூறியதில் அல்லது உங்கள் உள்ளங்களில் மறைத்(து வைத்)ததில் உங்கள் மீது குற்றமே இல்லை. நிச்சயமாக நீங்கள் அவர்களை நினைப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். நல்ல கூற்றைக் கூறுவதைத் தவிர (இத்தாவுடைய காலத்தில்) அவர்களுக்கு இரகசியமாக வாக்குறுதி அளிக்காதீர்கள். விதிக்கப்பட்ட சட்டம் அதன் தவணையை அடையும் வரை திருமண ஒப்பந்தத்தை உறுதி செய்யாதீர்கள். உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை நிச்சயமாக அல்லாஹ் அறிவான் என்பதை அறியுங்கள். எனவே, அவனைப் பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் சகிப்பாளன் என்பதையும் அறியுங்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அப்பெண்களை திருமணம் பேசுவதற்காக நீங்கள் சூசகமாக எடுத்துக் கூறியதில் அல்லது உங்கள் உள்ளங்களில் மறைத்(து வைத்)ததில் உங்கள் மீது அறவே குற்றமில்லை. நிச்சயமாக நீங்கள் அவர்களை (மணமுடிக்க) நினைப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். நல்ல கூற்றைக் கூறுவதைத் தவிர (இத்தாவுடைய காலத்தில்) அவர்களுக்கு ரகசியமாக (திருமண) வாக்குறுதி அளிக்காதீர்கள். விதிக்கப்பட்ட சட்டம் (இத்தா) அதன் தவணையை அடையும் வரை (அப்பெண்களுடன்) திருமண ஒப்பந்தத்தை உறுதி செய்யாதீர்கள். உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகிறான் என்பதை அறியுங்கள். ஆகவே, அவனைப் பயந்து (அவனுக்கு மாறுசெய்வதைவிட்டு) எச்சரிக்கையாக இருங்கள். இன்னும், நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் சகிப்பாளன் என்பதையும் அறியுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi235. (இத்தா இருக்கும் ஒரு பெண்ணை நீங்கள் திருமணம் செய்யக் கருதினால் உங்கள்) திருமண விருப்பத்தை நீங்கள் ஜாடையாக அறிவிப்பதினாலோ அல்லது உங்கள் மனதில் மறைவாக வைத்துக் கொள்வதினாலோ உங்கள் மீது குற்றமில்லை. (ஏனெனில்) நீங்கள் (உங்கள் எண்ணத்தை இத்தா முடிந்த பின்) அவர்களிடம் நிச்சயமாகக் கூறுவீர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆதலால், நீங்கள் கண்ணியமான முறையில் (ஜாடையாகக்) கூறுவதைத் தவிர (இத்தாவுடைய காலத்தில், திருமணத்தைப் பற்றி) அவர்களுடன் இரகசியமாகவும் வாக்குறுதி செய்துகொள்ள வேண்டாம். மேலும், இத்தாவின் தவணை முடிவதற்குள் (அவர்களை) திருமணம் செய்து கொள்ளவும் நாடாதீர்கள். உங்கள் மனதிலுள்ளவற்றை நிச்சயமாக அல்லாஹ் அறிவான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து அவனுக்குப் பயந்து கொள்ளுங்கள். (இத்தகைய எண்ணத்தைத் தவிர்த்துக் கொண்டால்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், பொறுமையுடையவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70