لَّا جُنَاحَ عَلَيْكُمْ إِن طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ مَا لَمْ تَمَسُّوهُنَّ أَوْ تَفْرِضُوا۟ لَهُنَّ فَرِيضَةً وَمَتِّعُوهُنَّ عَلَى ٱلْمُوسِعِ قَدَرُهُۥ وَعَلَى ٱلْمُقْتِرِ قَدَرُهُۥ مَتَٰعًۢا بِٱلْمَعْرُوفِ حَقًّا عَلَى ٱلْمُحْسِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபெண்களை நீங்கள் விவாகரத்து செய்தால் - அவர்களை நீங்கள் தொடாமல் இருக்கும்போது அல்லது அவர்களுக்கு மஹ்ரை நிர்ணயிக்காமல் இருக்கும்போது - (அது) உங்கள் மீது குற்றமே இல்லை. அவர்களுக்கு நல்ல முறையில் பொருள் கொடுங்கள். செல்வந்தர் மீது அவருடைய அளவு(க்கு)ம் ஏழை மீது அவருடைய அளவு(க்கு)ம் கடமையாகும். நல்லறம் புரிவோர் மீது (இது) கடமையாகும்.
Tamil Translation - Omar Sharifபெண்களை - அவர்களை நீங்கள் தொடாமல் (-உடலுறவு வைக்காமல்) இருக்கும்போது; அல்லது, அவர்களுக்கு மஹ்ரை நிர்ணயிக்காமல் இருக்கும்போது - நீங்கள் விவாகரத்து செய்தால் (அது) உங்கள் மீது அறவே குற்றமில்லை. அவர்களுக்கு (தலாக் விடப்பட்ட பெண்களுக்கு) நல்ல முறையில் பொருள் கொடுங்கள். (தலாக் செய்த) செல்வந்தர் மீது அவருடைய (பொருளாதார) அளவு(க்கு)ம் (தலாக் செய்த) ஏழை மீது அவருடைய (பொருளாதார) அளவு(க்கு)ம் (தலாக் விடப்பட்ட பெண்களுக்கு பொருளை அன்பளிப்பு செய்வது) கடமையாகும். நல்லறம் புரிவோர் மீது (இது) கடமையாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi236. பெண்களின் மஹரைக் குறிப்பிடாமல் (திருமணம் செய்து) அவர்களுடன் நீங்கள் வீடு கூடாமல் தலாக்குக் கூறிவிட்டாலும் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்கு ஏதும் கொடுத்துப் பயனடையச் செய்யவும். பணக்காரன் தன் தகுதிக்கேற்பவும், ஏழை தன் சக்திக்கேற்பவும் கண்ணியத்தோடு (அவர்களுக்குக் கொடுத்து) பயனடையச் செய்யவேண்டியது நல்லோர் மீது கடமையாகும்.