caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 234

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:234

وَٱلَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَٰجًا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِىٓ أَنفُسِهِنَّ بِٱلْمَعْرُوفِ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களில் மனைவிகளை விட்டு விட்டு இறப்பவர்கள் அவர்(களின் மனைவி)கள் நான்கு மாதங்கள், பத்து (நாள்கள்) தங்களுக்கு (இத்தா) எதிர்பார்ப்பார்கள். அவர்கள் தங்கள் தவணையை அடைந்து விட்டால் நல்ல முறையில் அவர்கள் தங்களுக்கு (எதையும்) செய்வதில் உங்கள் மீது குற்றமே இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் ஆழ்ந்தறிபவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், உங்களில் எவர்கள் இறப்பார்களோ; இன்னும், மனைவிகளை விட்டுச் செல்வார்களோ அந்த மனைவிமார்கள் நான்கு மாதங்கள், பத்து நாட்கள் தங்களுக்கு (இத்தா முடிவதை) எதிர்பார்(த்து இரு)ப்பார்கள். அவர்கள் தங்கள் (இத்தாவின் இறுதி) தவணையை அடைந்து விட்டால் நல்ல முறையில் அவர்கள் தங்களை (மறுமணத்திற்கு) தயார் செய்வதில் (பொறுப்பாளர்களாகிய) உங்கள் மீது(ம் அவர்கள் மீதும்) அறவே குற்றமில்லை. (அவர்கள் செய்தது விரும்பத்தக்க நல்ல செயல்தான்.) நீங்கள் செய்வதை அல்லாஹ் ஆழ்ந்தறிபவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi234. உங்களில் எவரேனும் மனைவிகளை விட்டு இறந்தால், (அம்)மனைவிகள் நான்கு மாதம் பத்து நாட்கள் (இத்தா முடிவதை) எதிர்பார்த்திருக்கவும். (இதற்கு ‘மரண இத்தா' என்று பெயர்.) ஆதலால், அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை முடித்து விட்டால் (அவர்களில் மறுமணம் செய்ய விருப்பமுள்ளவர்கள்) தங்களை ஒழுங்கான முறையில் (அலங்காரம்) ஏதும் செய்து கொள்வதைப் பற்றி குற்றமில்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70