قُلْ تَعَالَوْا۟ أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلَّا تُشْرِكُوا۟ بِهِۦ شَيْـًٔا وَبِٱلْوَٰلِدَيْنِ إِحْسَٰنًا وَلَا تَقْتُلُوٓا۟ أَوْلَٰدَكُم مِّنْ إِمْلَٰقٍ نَّحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ وَلَا تَقْرَبُوا۟ ٱلْفَوَٰحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَلَا تَقْتُلُوا۟ ٱلنَّفْسَ ٱلَّتِى حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلْحَقِّ ذَٰلِكُمْ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمْ تَعْقِلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக: வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது தடை செய்தவற்றை(யும் ஏவியவற்றையும்) நான் (உங்களுக்கு) ஓதுகிறேன். (அவையாவன:) அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய் தந்தையுடன் அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள். வறுமையினால் உங்கள் பிள்ளைகளைக் கொல்லாதீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். மானக்கேடானவற்றை அவற்றில் வெளிப்படையானதையும் மறைவானதையும் (செய்ய) நெருங்காதீர்கள். அல்லாஹ் (கொலை செய்யக்கூடாது என்று) தடை செய்த உயிரை நியாயமின்றி கொல்லாதீர்கள். இவை, நீங்கள் சிந்தித்துப் புரிவதற்காக இவற்றைக் கெண்டு (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசிக்கிறான்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: “வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது தடை செய்தவற்றை(யும் ஏவியவற்றையும்) நான் (உங்களுக்கு) ஓதுகிறேன். (அவையாவன:) அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். இன்னும், தாய் தந்தைக்கு உதவி உபகாரம் செய்து அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள். இன்னும், வறுமையினால் உங்கள் பிள்ளைகளைக் கொல்லாதீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். இன்னும், மானக்கேடானவற்றை அவற்றில் வெளிப்படையானது இன்னும் மறைவானதின் பக்கம் நெருங்காதீர்கள். (கொலை செய்யக்கூடாது என்று) அல்லாஹ் தடை செய்த உயிரை நியாயமின்றி (அதற்குரிய உரிமை இன்றி) கொல்லாதீர்கள். இவை, - நீங்கள் சிந்தித்துப் புரிவதற்காக இவற்றின் மூலம் (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசிக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi151. (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்தவற்றை(யும் ஏவியிருப்பவற்றையும்) நான் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறேன். (அவையாவன:) அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்காதீர்கள். (உங்கள்) தாய் தந்தையுடன் மிக அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள் (அவர்களுக்கு உதவி செய்யுங்கள்). வறுமைக்குப் பயந்து உங்கள் பிள்ளைகளை நீங்கள் கொலை செய்யாதீர்கள். (ஏனென்றால்,) உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ உள்ள மானக்கேடான விஷயங்களில் எதற்கும் நெருங்காதீர்கள். (கொலை செய்யக்கூடாதென்று) அல்லாஹ் தடை செய்துள்ள எந்த மனிதனையும் நியாயமின்றி கொலை செய்யாதீர்கள். நீங்கள் (தவறு செய்யாது) உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு இவற்றை (விவரித்து) உபதேசிக்கிறான்.