caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 152

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:152

وَلَا تَقْرَبُوا۟ مَالَ ٱلْيَتِيمِ إِلَّا بِٱلَّتِى هِىَ أَحْسَنُ حَتَّىٰ يَبْلُغَ أَشُدَّهُۥ وَأَوْفُوا۟ ٱلْكَيْلَ وَٱلْمِيزَانَ بِٱلْقِسْطِ لَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا وَإِذَا قُلْتُمْ فَٱعْدِلُوا۟ وَلَوْ كَانَ ذَا قُرْبَىٰ وَبِعَهْدِ ٱللَّهِ أَوْفُوا۟ ذَٰلِكُمْ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅநாதையின் செல்வத்தை அவர் அவருடைய பருவத்தை அடையும் வரை மிக அழகிய வழியில் தவிர நெருங்காதீர்கள். அளவையையும் நிறுவையையும் நீதமாக முழுமைப்படுத்துங்கள். ஓர் ஆன்மாவிற்கு அதன் சக்திக்கு உட்பட்டே தவிர நாம் சிரமம் கொடுப்பதேயில்லை. நீங்கள் (தீர்ப்பு) கூறினால் (அதனால் பாதிக்கப்படுபவர்) உறவினராக இருந்தாலும் நீதமாக கூறுங்கள். அல்லாஹ்வின் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். இவை, நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகவே இவற்றைக் கொண்டு (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசித்தான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அனாதையின் செல்வ(ம் உங்கள் பராமரிப்பில் இருந்தால் அந்த செல்வ)த்தின் பக்கம் மிக அழகிய வழியில் தவிர நெருங்காதீர்கள். இறுதியாக, அவர் தனது பருவத்தை அடையும்போது (அவருடைய செல்வத்தை அவரிடம் ஒப்படைத்து விடுங்கள்!) இன்னும், அளந்து கொடுப்பதையும் நிறுத்து கொடுப்பதையும் நீதமாக முழுமைப்படுத்தி செய்யுங்கள். ஓர் ஆன்மாவை - அதன் சக்திக்கு உட்பட்டே தவிர - நாம் சிரமப்படுத்துவதில்லை. இன்னும், நீங்கள் (தீர்ப்பு) கூறினால் (அதனால் பாதிக்கப்படுபவர்) உறவினராக இருந்தாலும் நீதமாக (தீர்ப்பு) கூறுங்கள். அல்லாஹ்வின் (பெயர் கூறி நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றவருடன் செய்யும்) உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். இவை, - நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகவே இவற்றின் மூலம் (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசித்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi152. ‘‘அநாதைகளின் பொருளை அவர்கள் பருவமடையும் வரை நியாயமான முறையில் தவிர நெருங்காதீர்கள். அளவை (சரியான அளவு கொண்டு) முழுமையாக அளங்கள். எடையை நீதமாக நிறுங்கள். ஓர் ஆத்மாவை அதன் சக்திக்கு மேல் நாம் நிர்ப்பந்திப்பதேயில்லை. நீங்கள் எதைக் கூறியபோதிலும் (அதனால் பாதிக்கப்படுபவர்கள்) உங்கள் உறவினர்கள் ஆயினும் (சரியே!) நீதத்தையே கூறுங்கள். நீங்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுங்கள். நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவே இவற்றை (உங்கள் இறைவன்) உங்களுக்கு உபதேசிக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70