قُلْ هَلُمَّ شُهَدَآءَكُمُ ٱلَّذِينَ يَشْهَدُونَ أَنَّ ٱللَّهَ حَرَّمَ هَٰذَا فَإِن شَهِدُوا۟ فَلَا تَشْهَدْ مَعَهُمْ وَلَا تَتَّبِعْ أَهْوَآءَ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا وَٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ وَهُم بِرَبِّهِمْ يَعْدِلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version"நிச்சயமாக அல்லாஹ் இதைத் தடை செய்தான் என்று சாட்சியளிக்கின்ற உங்கள் சாட்சிகளை அழைத்து வாருங்கள்” என்று கூறுவீராக. அவர்கள் (பொய்) சாட்சி அளித்தாலும் நீர் அவர்களுடன் சாட்சியளிக்காதீர். நம் வசனங்களை பொய்ப்பிப்பவர்கள் இன்னும் இறுதிநாளை நம்பிக்கை கொள்ளாமல், தங்கள் இறைவனுக்கு இணைவைப்பவர்களின் ஆசைகளை பின்பற்றாதீர்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) “நிச்சயமாக அல்லாஹ் இதைத் தடை செய்தான் என்று சாட்சி கூறுகின்ற உங்கள் சாட்சிகளை அழைத்து வாருங்கள்’’ என்று கூறுவீராக. ஆக, அவர்கள் (பொய்) சாட்சி கூறினாலும் நீர் அவர்களுடன் சாட்சி கூறாதீர். இன்னும், நம் வசனங்களை பொய்ப்பிப்பவர்களுடைய ஆசைகளையும் இறுதிநாளை நம்பிக்கை கொள்ளாமல், தங்கள் இறைவனுக்கு இணைவைப்பவர்களின் ஆசைகளையும் (நபியே!) நீர் பின்பற்றாதீர்.
Tamil Translation - Abdulhamid Baqawi150. (மேலும், அவர்களை நோக்கி) நிச்சயமாக அல்லாஹ் இதைத் தடை செய்தான் என்று நீங்கள் உறுதிப்படுத்துவதற்காக உங்கள் சாட்சிகளை அழைத்து வாருங்கள்'' என்று நீர் கூறுவீராக. (அவ்வாறு அவர்களை அழைத்து வந்து) அவர்களும் (அவ்வாறே பொய்) சாட்சி கூறியபோதிலும் (அதற்காக) நீரும் அவர்களுடன் சேர்ந்து (அவ்வாறு) சாட்சி கூறவேண்டாம். மேலும், நம் வசனங்கள் பொய்யெனக் கூறியவர்கள் மற்றும் இறுதி நாளை நம்பிக்கை கொள்ளாதவர்களுடைய மன விருப்பங்களை நீர் பின்பற்றாதீர். அவர்கள்தான் தங்கள் இறைவனுக்கு (பலவற்றை) இணையாக்குகின்றனர்.