مَا كَانَ لِأَهْلِ ٱلْمَدِينَةِ وَمَنْ حَوْلَهُم مِّنَ ٱلْأَعْرَابِ أَن يَتَخَلَّفُوا۟ عَن رَّسُولِ ٱللَّهِ وَلَا يَرْغَبُوا۟ بِأَنفُسِهِمْ عَن نَّفْسِهِۦ ذَٰلِكَ بِأَنَّهُمْ لَا يُصِيبُهُمْ ظَمَأٌ وَلَا نَصَبٌ وَلَا مَخْمَصَةٌ فِى سَبِيلِ ٱللَّهِ وَلَا يَطَـُٔونَ مَوْطِئًا يَغِيظُ ٱلْكُفَّارَ وَلَا يَنَالُونَ مِنْ عَدُوٍّ نَّيْلًا إِلَّا كُتِبَ لَهُم بِهِۦ عَمَلٌ صَٰلِحٌ إِنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجْرَ ٱلْمُحْسِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமதீனாவாசிகள் இன்னும் அவர்களைச் சுற்றி உள்ள கிராம அரபிகளுக்கு -அவர்கள் அல்லாஹ்வின் தூதரை விட்டு பின் தங்குவதும்; அவருடைய உயிரைவிட தங்கள் உயிர்களை நேசிப்பதும்-தகுந்ததல்ல. அதற்குக் காரணம், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஒரு தாகமோ, ஒரு களைப்போ, ஒரு பசியோ அடையாது; இன்னும் நிராகரிப்பாளர்களைக் கோபமூட்டுகிற ஓர் இடத்தை இவர்கள் மிதிக்க மாட்டார்கள்; எதிரியிடமிருந்து ஒரு துன்பத்தை இவர்கள் அடையமாட்டார்கள் இவற்றிற்கு பதிலாக அவர்களுக்கு நன்மையான செயல்(கள்) எழுதப்பட்டே தவிர. நிச்சயமாக அல்லாஹ் நல்லறம்புரிவோரின் கூலியை வீணாக்க மாட்டான்.
Tamil Translation - Omar Sharifமதீனாவாசிகள்; இன்னும், அவர்களைச் சுற்றி உள்ள கிராம அரபிகளுக்கு - அவர்கள் அல்லாஹ்வின் தூதரை விட்டு பின் தங்குவதும்; அவருடைய உயிரை விட தங்கள் உயிர்களை நேசிப்பதும் - ஆகுமானதல்ல. அதற்குக் காரணம், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு தாகமோ, களைப்போ, பசியோ எது ஏற்பட்டாலும்; இன்னும், நிராகரிப்பாளர்களைக் கோபமூட்டுகிற இடத்தை இவர்கள் மிதித்தாலும்; இன்னும், எதிரிகளிடமிருந்து துன்பத்தை அவர்கள் அடைந்தாலும், இவற்றிற்கு பதிலாக அவர்களுக்கு நன்மையான செயல்(கள்) எழுதப்படாமல் இருக்காது. நிச்சயமாக அல்லாஹ் நல்லறம்புரிபவர்களின் கூலியை வீணாக்க மாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi120. மதீனாவாசிகள் இன்னும் அவர்களைச் சூழ்ந்து வசிக்கும் கிராமத்து அரபிகள் ஆகிய இவர்கள் அல்லாஹ்வுடைய தூதரை விட்டுப் (பிரிந்து) பின் தங்குவதும்; (அல்லாஹ்வுடைய) தூதரின் உயிரைவிட தங்கள் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுமானதல்ல. ஏனென்றால், அல்லாஹ்வுடைய பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், கலைப்பு, பசி (ஆகியவையும்), நிராகரிப்பவர்களைக் கோபமூட்டும்படியான இடத்தில் கால் வைத்து, அதனால் எதிரியிடமிருந்து ஒரு துன்பத்தை அடைதல் ஆகிய இவையனைத்தும் அவர்களுக்கு நன்மைகளாகவே பதிவு செய்யப்படுகின்றன. நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) நன்மை செய்பவர்களின் (அழகிய பண்பாளர்களின்) கூலியை வீணாக்கி விடுவதில்லை.