وَلَا يُنفِقُونَ نَفَقَةً صَغِيرَةً وَلَا كَبِيرَةً وَلَا يَقْطَعُونَ وَادِيًا إِلَّا كُتِبَ لَهُمْ لِيَجْزِيَهُمُ ٱللَّهُ أَحْسَنَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(போரில்) ஒரு சிறிய, பெரிய தர்மத்தை அவர்கள் தர்மம் புரியமாட்டார்கள்; ஒரு பள்ளத்தாக்கை அவர்கள் கடக்க மாட்டார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக அழகியதை அல்லாஹ் அவர்களுக்குக் கூலி கொடுப்பதற்காக அவர்களுக்கு (நன்மையாக) அது பதியப்பட்டே தவிர.
Tamil Translation - Omar Sharifஇன்னும் (அல்லாஹ்வின் பாதையில்) சிறிய, பெரிய செலவை அவர்கள் செலவு செய்தாலும் ஒரு பள்ளத்தாக்கை அவர்கள் கடந்து சென்றாலும் அவை அவர்களுக்கு (நன்மைகளாக) பதியப்படாமல் இருக்காது. இறுதியாக, அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கு மிக அழகிய(சொர்க்கத்)தை அல்லாஹ் அவர்களுக்குக் கூலியாக கொடுப்பான்.
Tamil Translation - Abdulhamid Baqawi121. இவர்கள் சிறிதோ பெரிதோ (அல்லாஹ்வுடைய பாதையில்) எதைச் செலவு செய்தபோதிலும் (அவ்வாறே அல்லாஹ்வுடைய பாதையில்) எந்த பூமியைக் கடந்தபோதிலும் அவர்களுக்காக அது பதிவு செய்யப்படுகிறது. ஏனெனில், அவர்கள் செய்த இவற்றைவிட மிக அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான்.