caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Maaida அத்தியாயம், வசனம் 5

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 112 · 5:5

ٱلْيَوْمَ أُحِلَّ لَكُمُ ٱلطَّيِّبَٰتُ وَطَعَامُ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ حِلٌّ لَّكُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَّهُمْ وَٱلْمُحْصَنَٰتُ مِنَ ٱلْمُؤْمِنَٰتِ وَٱلْمُحْصَنَٰتُ مِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ مِن قَبْلِكُمْ إِذَآ ءَاتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحْصِنِينَ غَيْرَ مُسَٰفِحِينَ وَلَا مُتَّخِذِىٓ أَخْدَانٍ وَمَن يَكْفُرْ بِٱلْإِيمَٰنِ فَقَدْ حَبِطَ عَمَلُهُۥ وَهُوَ فِى ٱلْـَٔاخِرَةِ مِنَ ٱلْخَٰسِرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்று, நல்லவை உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டன. வேதம் கொடுக்கப்பட்டவர்களின் உணவும் உங்களுக்கு ஆகுமானதாகும்! உங்கள் உணவும் அவர்களுக்கு ஆகுமானதாகும்! ஈமான் கொண்ட பெண்களில் கற்புள்ள பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களில் கற்புள்ள பெண்களும் ஆகுமானவர்களாகும் அவர்களுடைய மணக்கொடைகளை நீங்கள் அவர்களுக்கு கொடுத்தால். (நீங்களும்) கற்புள்ளவர்களாக இருக்கவேண்டும், விபசாரர்களாக, இரகசிய தோழிகளை ஆக்காதவர்களாக இருக்கவேண்டும். எவர் (இந்த சட்டங்களை) நம்பிக்கைகொள்ள மறுக்கிறாரோ அவருடைய (நற்)செயல் திட்டமாக அழிந்துவிடும். அவர் மறுமையில் நஷ்டவாளிகளில் இருப்பார்.
Tamil Translation - Omar Sharifஇன்று, நல்ல உணவுப் பொருட்கள் அனைத்தும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டன. வேதம் கொடுக்கப்பட்டவர்களின் புலால் உணவும் உங்களுக்கு ஆகுமானதாகும்! உங்கள் புலால் உணவும் அவர்களுக்கு ஆகுமானதாகும்! ஈமானுடைய பெண்களில் கற்புள்ள பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களில் கற்புள்ள பெண்களும் (நீங்கள் திருமணம் முடிக்க உங்களுக்கு) ஆகுமானவர்கள் ஆவார்கள், நீங்கள் அவர்களுடைய மஹ்ர்களை அவர்களுக்கு கொடுத்தால் (நீங்கள் அவர்களை மணமுடிக்கலாம்). நீங்களும் கற்புள்ளவர்களாக இருக்கவேண்டும், சட்டவிரோத (கள்ள) உறவில் ஈடுபடாதவர்களாக, இரகசிய தோழிகளை (உங்களுக்கு) வைக்காதவர்களாக இருக்கவேண்டும். இன்னும், எவர் (இந்த சட்டங்களை) நம்பிக்கைகொள்ள மறுக்கிறாரோ அவருடைய (நற்)செயல் திட்டமாக அழிந்துவிடும். இன்னும், அவர் மறுமையில் நஷ்டவாளிகளில் இருப்பார்.
Tamil Translation - Abdulhamid Baqawi5. (நம்பிக்கையாளர்களே!) இன்றுமுதல் நல்லவை அனைத்தும் உங்களுக்கு (உண்பதற்கு) ஆகுமாக்கப்பட்டு விட்டன. வேதத்தை உடையவர்களின் உணவும் உங்களுக்கு ஆகுமானதே! உங்கள் உணவும் அவர்களுக்கு ஆகுமானதே! நம்பிக்கை கொண்ட கற்புடைய பெண்களையும், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்ட கற்புடைய பெண்களையும், விபச்சாரிகளாகவோ வைப்பாட்டிகளாகவோ கொள்ளாமல், அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மஹர்களையும் கொடுத்து (திருமணம் செய்து) கொள்வது (உங்களுக்கு ஆகும்). எவன் நம்பிக்கை கொண்டதன் பின்னர் (இந்த சட்டங்களை) நிராகரிக்கிறானோ அவனுடைய நற்செயல்கள் நிச்சயமாக அழிந்துவிடும். மறுமையிலோ அவன் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களில்தான் இருப்பான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70