caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 94

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:94

يَعْتَذِرُونَ إِلَيْكُمْ إِذَا رَجَعْتُمْ إِلَيْهِمْ قُل لَّا تَعْتَذِرُوا۟ لَن نُّؤْمِنَ لَكُمْ قَدْ نَبَّأَنَا ٱللَّهُ مِنْ أَخْبَارِكُمْ وَسَيَرَى ٱللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُۥ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَٰلِمِ ٱلْغَيْبِ وَٱلشَّهَٰدَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அவர்களிடம் திரும்பினால் உங்களிடம் அவர்கள் புகல் கூறுவார்கள். (நபியே!) கூறுவீராக: “புகல் கூறாதீர்கள். நாங்கள் உங்க(ள் புகல்க)ளை நம்ப மாட்டோம். உங்கள் செய்திகளிலிருந்து (சிலவற்றை) அல்லாஹ் எங்களுக்கு அறிவித்து விட்டான். அல்லாஹ் உங்கள் செயல்களைப் பார்ப்பான். இன்னும் அவனுடைய தூதரும் (உங்கள் செயலைப் பார்ப்பார்.) பிறகு மறைவையும் வெளிப்படையையும் அறிந்தவ(னாகிய அல்லாஹ்வி)னிடம் திருப்பப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை (அவன்) உங்களுக்கு அறிவிப்பான்.
Tamil Translation - Omar Sharif(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அவர்களிடம் திரும்பினால் உங்களிடம் அவர்கள் சாக்கு சொல்வார்கள். (நபியே!) கூறுவீராக: “சாக்கு சொல்லாதீர்கள். நாங்கள் உங்க(ள் சாக்கு)களை நம்ப மாட்டோம். உங்கள் செய்திகளிலிருந்து (சிலவற்றை) அல்லாஹ் எங்களுக்கு அறிவித்து விட்டான். இன்னும், அல்லாஹ் உங்கள் செயல்களைப் பார்ப்பான். இன்னும், அவனுடைய தூதரும் (உங்கள் செயலைப் பார்ப்பார்). பிறகு, மறைவையும் வெளிப்படையையும் அறிந்தவ(னாகிய அல்லாஹ்வி)னிடம் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள். ஆக, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi94. (நம்பிக்கையாளர்களே! போர் செய்து) நீங்கள் (வெற்றியோடும், சுகத்தோடும்) அவர்களிடம் திரும்பிய சமயத்தில், உங்களிடம் அவர்கள் (வந்து போருக்கு வராததைப் பற்றி மன்னிப்பைத் தேடி) காரணம் சொல்கின்றனர். (அதற்கு அவர்களை நோக்கி நபியே!) நீர் கூறுவீராக: ‘‘நீங்கள் காரணம் கூறாதீர்கள். நாங்கள் உங்களை நம்பவே மாட்டோம். உங்கள் (வஞ்சக) விஷயங்களை நிச்சயமாக அல்லாஹ் எங்களுக்கு அறிவித்துவிட்டான். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அதிசீக்கிரத்தில் உங்கள் செயலை அறிந்து கொள்வார்கள். முடிவில், மறைவானதையும் வெளிப்படையானதையும் அறிந்த (அ)வனிடம் தான் கொண்டு போகப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அது சமயம் அவனே உங்களுக்கு அறிவிப்பான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70