caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 95

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:95

سَيَحْلِفُونَ بِٱللَّهِ لَكُمْ إِذَا ٱنقَلَبْتُمْ إِلَيْهِمْ لِتُعْرِضُوا۟ عَنْهُمْ فَأَعْرِضُوا۟ عَنْهُمْ إِنَّهُمْ رِجْسٌ وَمَأْوَىٰهُمْ جَهَنَّمُ جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களிடம் நீங்கள் திரும்பினால், நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுவதற்காக உங்களிடம் அல்லாஹ்வின் மீது சத்தியமி(ட்)டு (பொய் கூறு)வார்கள். ஆகவே, அவர்களைப் புறக்கணித்து விடுங்கள். நிச்சயமாக அவர்கள் அசுத்தமானவர்கள். அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு கூலியாக அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான்.
Tamil Translation - Omar Sharifநீங்கள் (போரிலிருந்து) அவர்களிடம் திரும்பி சென்றால், நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுவதற்காக உங்களிடம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்(து பொய் கூறு)வார்கள். ஆகவே, அவர்களைப் புறக்கணித்து விடுங்கள். நிச்சயமாக, அவர்கள் அசுத்தமானவர்கள். அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கு கூலியாக அவர்களுடைய தங்குமிடம் நரகமாகத்தான் இருக்கும்.
Tamil Translation - Abdulhamid Baqawi95. (நம்பிக்கையாளர்களே! போரிலிருந்து வெற்றியுடன்) அவர்களிடம் நீங்கள் திரும்ப வந்தால், நீங்கள் அவர்களை(க் குற்றம் பிடிக்காது) புறக்கணித்து (விட்டு)விட, அவர்கள் அல்லாஹ்வின் மீது உங்கள் முன் சத்தியம் செய்வார்கள். ஆகவே, நீங்களும் அவர்களை புறக்கணித்து (விட்டு)விடுங்கள். நிச்சயமாக அவர்கள் அசுத்தமானவர்கள். அவர்கள் செல்லுமிடம் நரகம்தான். (அதுவே) அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலுக்குரிய தண்டனையாகும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70