إِنَّمَا ٱلسَّبِيلُ عَلَى ٱلَّذِينَ يَسْتَـْٔذِنُونَكَ وَهُمْ أَغْنِيَآءُ رَضُوا۟ بِأَن يَكُونُوا۟ مَعَ ٱلْخَوَالِفِ وَطَبَعَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ فَهُمْ لَا يَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(குற்றம் சுமத்த) வழியெல்லாம் அவர்கள் செல்வந்தர்களாக இருக்க உம்மிடம் அனுமதி கோருபவர்கள் மீதுதான். அவர்கள் பின் தங்கிய பெண்களுடன் ஆகுவதைக் கொண்டு திருப்தியடைந்தனர். அவர்களுடைய உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டான். ஆகவே, அவர்கள் அறிய மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifகுற்றம் சுமத்த வழியெல்லாம் எவர்கள், அவர்கள் செல்வந்தர்களாக இருக்கும் நிலையில் உம்மிடம் அனுமதி கோருகிறார்களோ அவர்கள் மீதுதான். பின் தங்கிவிட்ட பெண்களுடன் அவர்கள் இருந்து விடுவதைக் கொண்டு திருப்திபடுகிறார்கள். இன்னும், அவர்களுடைய உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டான். ஆகவே, அவர்கள் (தங்கள் தீய செயலின் கெட்ட பாதிப்பை) அறிய மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi93. (எனினும்,) எவர்கள் பணக்காரர்களாகவும் இருந்து (போருக்குச் செல்லாதிருக்க) உம்மிடம் அனுமதி கோரி (போருக்குச் செல்லாது வீட்டில்) தங்கி விடுபவர்களுடன் தாங்களும் இருந்துவிட விரும்பினார்களோ அவர்கள் மீதுதான் குற்றம். இவர்களுடைய உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். ஆகவே, அவர்கள் (இதனால் ஏற்படும் இழிவை) அறிந்துகொள்ள மாட்டார்கள்.